அசுவாரூட மூர்த்தி
பரிமேலழகர் அல்லது அசுவாரூட மூர்த்தி என்பது, ஈசனின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒன்றாகும். மணிவாசகருக்கு அருள்வதற்காக, ஈசன் கொண்ட திருக்கோலமே இப்பரிமேலழகர் திருக்கோலம் ஆகும். திருக்கோலம்[தொகு]பரிமேலழகரின் திருக்கோலத்தை மணிவாசகரும்[1], திருவாலவாயுடையார் புராணமும் வருமாறு வருணிக்கிறார்கள்.
வெண்ணிறாடை புனைந்து, கம்பீரமான தோற்றத்தில், மணிக்குண்டலமும், முத்துமா்லையும் தரித்தவராக குதிரை மீது காட்சி தருகின்றார் பரிமேலழகர். அவரது திருக்கரங்களில் ஒன்று, குதிரைக் கடிவாளத்தைத் தாங்கியதாகவும், மறுகரம் வெண்குடையொன்ரு தாங்கியதாகவும் அமையும்படி சித்தரிக்கப்படுவதுண்டு.[2] தொன்மம்[தொகு]பரிமேலழகர் திருக்கோலத்தின் வரலாற்றைத் தமிழ் நூல்களான [திருவிளையாடல் புராணம்]], திருவாலவாயுடையார் புராணம் என்பன கூறுகின்றன. மணிவாசகரிடம் பொன் கொடுத்து, குதிரை வாங்கி வர அனுப்பிய பாண்டிய மன்னன், அவர் அப்பொன்னை சிவப்பணிக்களித்தது அறிந்து சீற்றமுற, ஈசன் ஆணையால், ஆவணி மூலமன்று குதிரைகள் வரும் என்்று உறுதிகூறுகின்றார் மணிவாசகர். சொன்னாற்போலவே, பெருமளவு குதிரைகள் வந்துசேர்வதுடன், அவற்றுக்குத் தலைமை தாங்கி ஈசனே பரிமேலழகராக எழுந்தருள்கின்றார். பின், அக்குதிரைகள் தம் சுயவடிவான நரி வடிவம் கொள்வதும், மன்னன் சிவன் லீலையை அறிந்துகொள்வதும் அந்நூல்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.[3] [4] வழிபாடு[தொகு]மதுரை போன்ற சில தலங்களில், இத்திருவிளையாடல் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டப்படும் போது, எழுந்தருளி பரிமேலழகர் கோலம் பூண்கின்றார். அடிக்குறிப்புகள்[தொகு] |