கல்யாணசுந்தரர்
Jump to navigation
Jump to search
கல்யாணசுந்தரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.[1] உருவக் காரணம்[தொகு]பார்வதியின் தவத்தினால் சிவபெருமான் அந்தணராகத் தோன்றி, பார்வதி மணம் செய்து கொள்வதாகக் கூறினார். ஆனால் பார்வதி இவ்வாறான தோற்றத்தோடு வேண்டாம், சிவபெருமானாகவே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். சிவபெருமான் தன்னுடைய புலித்தோல் ஆடையும், ரிசப வாகனத்திலும் தோன்றி, அவ்வாறே திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். திருமண நாளன்று, அனைவரும் வடதிசைக்கு வரத் தென்திசை தாழ்ந்தது. சிவபெருமான் அகத்தியரை அழைத்து தென்திசைக்குச் செல்லுமாறு கூறினார். பார்வதி, சிவபெருமான் திருமணம் நடந்தது.[1] கோயில்கள்[தொகு]மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |