எல்லாம் வல்ல சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
எல்லாம் வல்ல சித்தர்
துணை: உமையம்மை
இடம்: கயிலை
ஆயுதம்: மான் மழு
வாகனம்: நந்தி தேவர்

எல்லாம் வல்ல சித்தர் என்பவர் ஒரு சித்தராவார். இவரை சிவபெருமானின் மனித வடிவாக வழிபடுகின்றனர்.[1] திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தரான படலத்தில் இவரைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவர் கோயிலில் வாழ்ந்து வந்த சித்தர் பல்வேறு சித்துகளைச் செய்து கொண்டிருந்தார். கல் யானை ஒன்றுக்கு எல்லாம் வல்ல சித்தர் கரும்பினைக் கொடுத்தார், அக் கல்யானையானது கரும்பினை தின்றது. இதனை அறிந்த அபிஷேகப் பாண்டியன் சித்தரை அரண்மனைக்கு அழைத்து வரும்படி சேவகரிடம் கூறினார். ஆனால் சேவர்களின் அழைப்பினை சித்தர் ஏற்கவில்லை. இதனால் பாண்டியரே சித்தரைக் காண வந்தார். அப்போது சித்தரின் மகிமையால் மீண்டும் கல்யானை உயிர்ப்பெற்று மன்னின் முத்துமாலையை தின்றது. இதனால் கோபம் கொண்ட மன்னன், கல்யானையும், சித்தரையும் தண்டிக்க சேவர்களை அனுப்பினார்.

எல்லாம் வல்ல சித்தரின் பார்வையால் சேவகர்கள் கல்லாக, சித்தரே சிவனென்று உணர்ந்த பாண்டிய மன்னன் எல்லாம் வல்ல சித்தரிடம் மன்னிப்புக் கோரினார். அதனால் கல்யானை தின்ற முத்து மாலையை மீட்டு தந்துவிட்டு சித்தர் மறைந்துவிட்டார்.

கோவில்[தொகு]

எல்லாம் வல்ல சித்தருக்கான சந்நிதி மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவர் கோயிலில் உள்ளது. இச்சந்நிதி அமைந்திருக்கும் இடத்தில்தான் பாண்டிய மன்னனுக்கு சித்தர் கல்யானை கொண்டு திருவிளையாடல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்நிதியானது கோவிலின் வடமேற்கில் உள்ள துர்கை சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாம்_வல்ல_சித்தர்&oldid=2767896" இலிருந்து மீள்விக்கப்பட்டது