மச்ச சம்ஹார மூர்த்தி
மச்ச சம்ஹார மூர்த்தி, அறுபத்து நான்கு சிவபெருமானின் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். மச்சம் என்றால் மீன் என்று பொருள். மச்ச வடிவெடுத்து வந்த விஷ்ணுவை அழித்த சிவபெருமானின் திருவுருவம் மச்ச சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
புராணம்[தொகு]சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மந்தரம் போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றார். வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். பின்னர் அதன் கண்னை தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சொல்லிலக்கணம்[தொகு]வேறு பெயர்கள்[தொகு]தோற்றம்[தொகு]உருவக் காரணம்[தொகு]சோமுகாசுரன் என்ற அரக்கன் மூன்று உலகத்தவராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவனிடமிருந்து பெற்றார். அந்த வரத்தினால் கர்வம் கொண்டு பிரம்மாவிடமிருந்து வேதங்களை கைப்பற்றி கடலினுள் மறைந்தார். இதனையறிந்த திருமால் மீனாக அவதாரமெடுத்து தோமுகாசுரனை வதம் செய்தார். ஆனால் மீனாகவே இருந்து கடலில் இருக்கும் மீன்களையும், விலங்குகளையும் துன்புருத்தினார். இதனையறிந்த சிவபெருமான் மீனவராக உருமாற்றம் அடைந்து, கடலில் வலைவீசி மீனை பிடித்தார். அதன் கண்களை தோண்டியெடுத்தார். அதன்பின் மீனாக இருந்த திருமாலுக்கு தன்னிலை தெரிந்தது. மீனாக இருந்த திருமாலை சம்ஹாரம் செய்த திருவுருவக் கோலம் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது. கோயில்கள்[தொகு]மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |