புஜங்கலளித மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
புஜங்கலளித மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: பாம்பினை ஆபரணமாக அணிந்த சிவவடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

புஜங்கலளித மூர்த்தி என்பது சைவசமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். காசிப முனிவர் வினந்தை மகனான கருடன், மற்றொரு தாயான கத்துவிற்கும் காசிப முனிவருக்கும் பிறந்த நாகங்களை கொடுமை படுத்தினார்.

இதனால் நாகங்கள் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி வேண்டி பூசைகள் செய்தன. கருடனிடமிருந்து காக்க நாகங்களை தன்னுடைய உடலில் ஆபரணமாக சிவபெருமான் தரித்துக் கொண்டார். இதனால் புஜங்கலளித மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். [1]

புஜங்கம் என்றால் பாம்பு. வந்தம் என்றால் ஆபரணம். பாம்பை ஆபரணமாக அணிந்தவர் என்று இதற்கு அர்த்தமாகும். [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=776 புஜங்கலளித மூர்த்தி தினமலர் கோயில்கள்
  2. http://www.maalaimalar.com/2013/04/22144005/sri-shiva-Murthy.html பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம் ஸ்ரீ புஜங்கலளித மூர்த்தி மாலைமலர் பார்த்தநாள் ஜூலை 07 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜங்கலளித_மூர்த்தி&oldid=3269033" இலிருந்து மீள்விக்கப்பட்டது