சக்கரதான மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
சக்கரதான மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: திருமாலுக்கு சக்கராயுதத்தினை தானம் செய்த சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சக்கரதான மூர்த்தி என்பது சைவக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். திருமாலின் வேண்டுதலால் மகிழ்வடைந்த சிவபெருமான், சலந்தரனைக் கொல்ல உருவாக்கிய சக்கராயுதத்தினை தானம் செய்த கோலம் சக்கரதான மூர்த்தியாகும். இம்மூர்த்தியை சக்கரதானர் என்றும் அழைப்பர்.[சான்று தேவை]

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

  • மாலுக்குச் சக்கரம் அளித்தவர்
  • சக்ரதாஸ்வரூப மூர்த்தி

தோற்றம்[தொகு]

உருவக் காரணம்[தொகு]

குபன் எனும் மன்னருக்காக ததீசி என்ற தவவலிமை மிகுந்த முனிவரிடம் திருமாலுக்கு போர் மூண்டது. அப்போது ததீசி முனிவர் மீது திருமால் தனது சக்கராயுதத்தினை ஏவினார். ஆனால் அச்சக்ராயுதம் ததீசி முனிவரின் தவவலிமையால் செயலற்றுப்போனது. ஆகவே உலகினைக் காக்கும் பொருட்டு திருமாலுக்கு மீண்டும் சக்ராயுதம் தேவைப்பட்டது.

அதற்காக திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார்.

கோயில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரதான_மூர்த்தி&oldid=1776389" இருந்து மீள்விக்கப்பட்டது