கௌரிவரப்ரத மூர்த்தி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கௌரி வரப்ரத மூர்த்தி என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். கருமை நிறமுடைய காளிக்கு பொன்நிற மேனியை வரமளித்து கௌரியாக மாற்றிய சிவபெருமான் உருவம் கௌரி வரப்ரத மூர்த்தியாகும். திருவுருவக் காரணம்[தொகு]மந்திர மலை சிவபெருமானை நோக்கி தவமிருந்து, பார்வதி சமேத சிவபெருமானாக தனக்கு காட்சியளிக்க வேண்டியது. அதனால் சிவபெருமான் பார்வதியுடன் அங்கு தங்கினார். பார்வதியிலிருந்து உருவம் பெருகின்ற பெண்ணொருத்தியால் மரணம் நிகழ வேண்டுமென பிரம்ம தேவரிடம் வரம் பெற்ற அரக்கனால் தேவர்களுக்கு துன்பம் நேர்ந்தது. அதனால் சிவபெருமான் காளியை அழைத்தபொழுது, தனது கருமை நிறத் தோற்றம் கண்டு மனம் வருந்தினார் காளி,. அதனால் பொன்நிற மேனியை சிவபெருமான் வரமாக அளித்தார். காளி கௌரியாக மாற வரமளித்த சிவபெருமான் கௌரிவரப்ரத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். [சான்று தேவை] |