உள்ளடக்கத்துக்குச் செல்

காமதகன மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
காமதகன மூர்த்தி

தமிழ்:காமேசுவரர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:காமனை எரித்த சிவபெருமான் / சிவாஷ் சிவ+ஆஷ் என்றால் நெருப்பு (அதாவது மன்மதனை எறித்து தன்னுடன் சேர்த்து கொண்ட நிகழ்வே மதனசேகரம் என்று அழைக்கப்படுவதுண்டு)
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

காமதகனர், அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். காமனை எரித்த சிவ உருவத்தினை காமதகனர் என்று வழங்குகின்றார்கள். [சான்று தேவை]

திருவுருவக் காரணம்

[தொகு]
  • பட்டர் நமக்கு முருகக் கடவுள் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறார். தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்டனர். சூரனை அழிக்க, சிவபெருமானிடமிருந்து தோன்றிய ஒரு மகனால்தான் முடியும் என்று அறிந்து கைலாயம் சென்றனர். சிவபெருமான் தவத்தில் இருந்தமையால் அதனை கலைக்க மன்மதனை நாடினார்கள். காமன் சிவபெருமான் மேல் கணை தொடுத்தான். கணை சிவபொருமான் மீது பட்டவுடன், தவத்தினை கலைத்த காமன் மீது கோபம் கொண்டார். அவனை நெற்றிக்கண்ணை திறந்து எரித்தார். இந்நிகழ்வினை காமதகனம் என்று சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சொல்லிலக்கணம்

[தொகு]

காம தகனம்

காம தகனம்

[தொகு]
  • கந்தர்வ புராணப்படி மன்மதன் ஆனவன் இவ்வுலகில் உள்ள ஆண் அழகையே தனது முகத்தில் சேகரித்து வைத்திருப்பதால் அவனக்கு " மதனசேகரன் " (இன்பசேகரன்), இராஜசேகரன் என்பதே அவனது இயற்ப்பெயராகும்.
  • மேலும் சிவபெருமான் தனது நீண்ட தவ வலிமை பெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் அவரது தவத்தை கலைக்க பல தேவர்கள் மற்றும் முனிவர்களால் மன்மதனை ஏவலாளியாக அனுப்புகின்றனர்.
  • அப்போது அவர்களது கட்டளையையேற்று பெரும் தவநிலையில் இருக்கும் சிவபெருமானின் மார்பை நோக்கி தனது மலர் பாணத்தை ஏவி சிவபெருமானின் தவத்தை கலைக்க சிவபெருமான் தனது கடும் தவம் கலைந்த கடுங்கோபத்தினால் தனது நெற்றிகண்ணால் மன்மதனை சுட்டு எறித்து விடுகிறார்.
  • அதன் பிறகு மதனசேகரன் (இன்பசேகரன்) கந்தர்வ காதலியான ரதிதேவி இவளுக்கு " கோகிலவாணி " என்ற பெயராலும் அழைக்கப்படுவதுண்டு இவள் தனது காதலன் மதனசேகரன் எறித்ததற்கு சிவபெருமானை நோக்கி மன்றாடி மீண்டும் உயிர்பிக்குமாறு கேட்க அதற்கு சிவபெருமான் மன்மதனை மீண்டும் உயிர்பிக்கலாகாது.
  • அதற்கு சிவபெருமான் ரதிதேவி இடம் கூறியது "மன்மதன்" அவன் செய்த என் வலிமைமிகு தவத்தை கலைத்த தண்டனையும் தாண்டி அவன் பலரையும் காமத்தால் மயக்கும் முறையற்ற செயல்களில் இருந்து இந்த மானுட மக்கள் வாழ்வை காக்கும் விதமாக காமம் அளவை மீற கூடாது என்ற ரீதியில் இனி மன்மதனான மதனசேகரனை என்னுள் சேர்த்து கொள்வது தான் சரியான முறையாகும். இனி அவன் என்னுள்ளே அடக்கம் ஆனவன் என்று கூறி சிவபெருமான் தன்னுள் அடக்கம் செய்து கொண்டார்.
  • அதன் பிறகு ரதிதேவியின் வேண்டுதலையேற்று இனி உனக்கு மட்டும் வேண்டுமானால் அனங்கா மன்மதனாக திகழ்வான் (அதாவது மாயமான முறையில்) என்று அருளினார்.
  • மேலும் இந்த காமதகன நிகழ்விற்கு பிறகு சிவபெருமான் மன்மதனை எறித்து தன்னுடன் சேர்த்து கொண்டதால் மன்மதன் மதனசேகரன், இன்பசேகரன், இராஜசேகரன், சந்திர பிம்பத்துடன் சேர்த்து சந்திரசேகரன் அல்லது சோமசேகரன் (இந்துமதனசேகன்), ஞானத்தால் ஞானசேகரன் என்ற மன்மதனின் முக அழகு சேகரிப்பை தன்னுடன் இணைத்துக் கொண்டு சிவபெருமானுக்கு சேகரன் என்ற பெயரானது மன்மதனை தன்னுடன் சேர்த்து கொண்ட பிறகான இறவல் பெயராக சிவபெருமானுக்கு நிலைத்து போனது.
  • மேலும் இந்த சிவபெருமான் மன்மதனை எறித்து தன்னுடன் சேர்த்து கொண்ட காமதகன நிகழ்வானது இன்றைய பாகிஸ்தான் நாட்டில் உள்ள கா என்ற பகுதியில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் வழிபடும் சைவ கோயிலான சிவபெருமான் எழுந்தருளும் கோயிலில் இச்சம்பவம் இத்தலத்தில் அரங்கேறிய சம்பவத்தை சிவபெருமான் "" சிவாஷ் "" என்று அழைக்கப்படுகிறார் அதாவது (சிவன்) சிவ+(ஆஷ்) என்றால் நெருப்பு (அதாவது மன்மதனை எறித்து தன்னுடன் சேர்த்து கொண்ட நிகழ்வே மதனசேகரம் என்று அழைக்கப்படுவதுண்டு) பெரிதாக கொண்டாடப்படுகிறது.
  • மேலும் இந்த காமதகன நிகழ்வு இந்தியா முழுவதும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் சிவபெருமான் மன்மதனை எறித்து தன்னுடன் சேர்க்கும் நிகழ்வானது " காம தகனம் " வடமொழியில் " மதனசேகரம் " என்ற பெயரில் பெரும் விமர்சையாக கொண்டாடபடுகிறது.

வேறு பெயர்கள்

[தொகு]

தோற்றம்

[தொகு]

உருவக் காரணம்

[தொகு]

கோயில்கள்

[தொகு]

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் காமதகன மூர்த்தியின் அழகான சிற்பம் நேர்த்தியான நிலையில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதகன_மூர்த்தி&oldid=4605616" இலிருந்து மீள்விக்கப்பட்டது