உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரசேகர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
சந்திரசேகரர்

மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:சந்திரனை தலையில்
சூடிய சிவபெருமான்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

சைவ சமயத்தில் சந்திரசேகரர் எனப்படுபவர் சிவனின் மகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றாகும். சந்திரனைத் தலையிற் தரித்த கோலம் இதுவாகும்.

சொல்லிலக்கணம்

[தொகு]
  • சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது எனக்கொள்ளலாம். [சான்று தேவை]
  • ஆனால் காமதகன புராணத்தில் சேகரன் என்றால் காமதேவனான மன்மதனை "சேகரன்" என்று குறிப்பிடுவதால் இந்த கோலத்தில் சிவபெருமான் மதியும் (சந்திரன்) + மதனும் (சேகரன்) இணைத்து வெண்ணிற கொள்ளை அழகான முகமுடைய சந்திரசேகரமூர்த்தியாக காட்சியளிப்பதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றது.

வேறு பெயர்கள்

[தொகு]
  • பிறையோன்
  • பிறை சூடிய பொம்மான்
  • பிறைசூடன்
  • தூவெண்மதிசூடி
  • பிறையன்
  • மதிசெஞ்சடையோன்
  • சந்திரசேகரன் அல்லது சந்திரமௌலி - (சிவபெருமான் தனது சடைமுடியில் பிறை நிலவை (சந்திரன்) சூடியவர்
  • சோமசேகரன் - சோமன் என்றாலும் சமஸ்கிருதமொழி வழியில் சந்திரனை "நிலா"வை குறிக்கிறது.
  • இந்துசேகரன் - இந்து என்பது சந்திரனின் மற்றொருப் பெயர்
  • மதியும் (சந்திரன்) மதனும் (மன்மதன்/சேகரன்) இணைந்த அழிய பிறைசூடிய உருவமே "சந்திரசேகரன்" என்று அழைக்கப்படுகிறது.
  • ஆனால் இதில் "சேகரன்" என்றால் மதன்மதனை குறிக்கும் அதாவது இவ்வுலகில் உள்ள அனைத்து ஆண் அழகையும் முகத்தில் சேகரித்து வைத்திருப்பதால் "சேகரன்" என்றும் சந்திரனின் வெண்மை நிற பிரகாச ஒளியில் ஒளிர்வதால் அந்த அழகையும், சந்திரனின் வெண்மை நிற ஒளியையும் சேர்த்து "சந்திரசேகரன்" அல்லது "சோமசேகரன்" என்று அழைக்கப்படுகிறார்.
  • பிறைசூடி
  • மாமதிசூடி

தோற்றம்

[தொகு]

பிறை அணிந்திருக்கும் சிவபெருமானின் வடிவம்.

வகைகள்

[தொகு]

சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.

  1. கேவல சந்திரசேகர் - கேவல என்றால் தனித்த நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி, தனித்து நிற்கிறார்.
  2. உமா சந்திரசேகர் - இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.
  3. ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலையில் இருக்கிறார்.

உருவக் காரணம்

[தொகு]

சந்திரன் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தான். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்ததாக புராணங்களில் காணலாம்.

தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை தோன்றிய போது இறைவனே அவன் மீது இரக்கங் கொண்டு அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், 'சந்திரசேகரர்' என்ற பெயர் பெற்றார் ஈசன்.

கோயில்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர_மூர்த்தி&oldid=4619358" இலிருந்து மீள்விக்கப்பட்டது