உமேச மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
உமேச மூர்த்தி
Uma Maheshvara.JPG
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: வேடுவக் கோலம்
துணை: பார்வதி
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

உமேச மூர்த்தி, அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். இவ்வடிவத்தில் சிவபெருமான் இடதுபுறம் உமையம்மையுடன் நின்றபடி காட்சியளிக்கும் கோலமாகும்.

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

சிவபெருமான் வலதுக்கையில் அபய முத்திரையைத் தாங்கியும், இடதுபுறத்தில் உமையுடனும் காணப்படுகிறார்.

உருவக் காரணம்[தொகு]

பிரம்மா தனது படைப்புத் தொழிலை செய்ய உதவியாக நான்கு குமாரர்களைப் படைத்தார். ஆனால் அவர்கள், அத்தொழில் செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தினை அடைய விரும்பினர். திருமாலும், பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பதைக் கண்டு ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கையிலை நோக்கி சென்றனர். அவரும் உமையுடன் இருப்பதைக் கண்டால் சனத் குமாரர்கள் வருத்தம் கொள்ள நேரிடும், பின் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என சிவபெருமான் தன் அருகே இருந்த அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார்.

பின் தட்சணாமூர்த்தியாக ஆலமரத்தில் தனித்து அமர்ந்து நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார். பின்பு தனது இடத்தோளைப் பார்த்தார். அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றியிருந்த உமையம்மை வெளிப்பட்டார். பிறகு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்து இருவரும் அருள் செய்தனர்.

கோயில்கள்[தொகு]

  • தலைமருது - ஆந்திர மாநிலம்
  • திருவிடை மருதூர் - நெல்லை மாவட்டம், தமிழ்நாடு


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமேச_மூர்த்தி&oldid=3016189" இருந்து மீள்விக்கப்பட்டது