சார்த்தூலஹர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
சார்த்தூலஹர மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சார்த்தூலஹர மூர்த்தி என்பவர் சிவபெருமானின் அறுபத்து மூன்று திருவுருவங்களில் ஒருவராவார். தருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை கொல்ல அனுப்பிய புலியின் தோலினை உரித்து உடுத்திக் கொண்ட தோற்றம் சார்த்துலஹர மூர்த்தியாகும். [1]

திருவுருவக் காரணம்[தொகு]

தருகாவனம் எனும் காட்டில் வாழ்ந்த முனிவர்கள் சிறந்த தவவலிமை பெற்றவர்கள். அதனால் ஆணவம் கொண்டனர். ஆணவத்தினை அழிப்பவராகிய சிவபெருமான் அவர்களின் ஆணவம் அழிக்க அழகே உருவான பிச்சாடனார் கோலத்தில் சென்றார். அம்முனிவர்களின் ரிசிப்பத்தினிகள் சிவபெருமானின் பிச்சாடனார் கோலத்தினைக் கண்டு மோகம் கொண்டு அவர் பின்னே சென்றனர்.

அதனால் முனிவர்கள் கோபம் கொண்டு அபிசார ஹோமம் என்ற யாகத்தினை வளர்த்தனர். அதன் மூலம் உருவாக்கப்பட்ட கூரிய கொடிய புலியை சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் அப்புலியை அடக்கி, அதன் தோலினை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்டார். அக்கோலமே சார்த்துலஹர மூர்த்தியாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=809 25.சார்த்தூலஹர மூர்த்தி தினமலர் கோயில்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்த்தூலஹர_மூர்த்தி&oldid=2204981" இலிருந்து மீள்விக்கப்பட்டது