கால சம்ஹாரர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கால சம்ஹாரர், அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். காலன் என்று அழைக்கப்படும் எமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும், காலந்தகர் எனவும் வழங்கப்படுகிறது. சொல்லிலக்கணம்[தொகு]காலன் - யமன், சம்ஹாரர் - அழித்தவர். காலனை அழித்தவர் என்று பொருள் கொள்ளும் படி கால சம்ஹாரர் என்று அழைக்கப்படுகிறார். வேறு பெயர்கள்[தொகு]இவ்வடிவத்தினை காலாந்தகர், காலாரி, கால சம்ஹார மூர்த்தி, காலகாலர், கூற்றினையுதைத்தவர், அந்தகனுக்கந்தகர் என்று பல்வேறு பெயர்களில் சைவர்கள் அழைக்கின்றார்கள். திருவுருவக் காரணம்[தொகு]மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16 வயது முடியும்போது, காலதேவனான எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை பற்றி வேண்டிக் கொண்டிருந்த போதே, எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்து அழித்தார். கோவில்[தொகு]திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹாரர் சிற்பம் உள்ளது மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |