வராக சம்ஹார மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
வராக சம்ஹார மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வராக வடிவெடுத்து வந்த
திருமாலை அழித்த சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

வராக சம்ஹார மூர்த்தி என்பது அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். வராகம் என்பது பன்றியைக் குறிக்கும் சொல்லாகும். வராக வடிவெடுத்து வந்த விஷ்ணுவை அழித்த சிவபெருமானின் திருவுருவம் வராக சம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.[1]

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

திருமாலின் வராகத் தோற்றத்தினை சூலத்தினால் குத்துவதைப் போல வராக சம்ஹார மூர்த்தி வடிவாகும்.

உருவக் காரணம்[தொகு]

பிரமனின் வரம் பெற்ற இரணியாக்கன் எனும் அசூரன் உலகை பாய் போல சுருட்டி கடலுக்குள் சென்று ஒளித்துவைத்தான். விஷ்ணு வராக உருவம் கொண்டு அவனை அழித்து உலகை மீட்டார். அதன் பின் கர்வம் கொண்டு எதிர்வந்த உயிர்கள் அனைத்தையும் வதைத்து உண்ண ஆரமித்தார். தேவர்களும், மனிதர்களும் சிவபெருமானிடம் மன்றாட, அவர்களுக்கு உதவும் பொருட்டு வேடனாக வடிவெடுத்தார் சிவபெருமான். வராகத்தினை சூலத்தினால் குத்தி, அதன் ஒரு கொம்பினை உடைத்தெரிந்தார். அக் கொம்பினை தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார். அதனால் வராகத்தின் கர்வம் அழிந்தது.

இந்த திருவுருவக் கோலம் வராக சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

கோயில்கள்[தொகு]

இலக்கியங்களில்[தொகு]

பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே என திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.[2] கர்வம் கொண்ட வராகம் பல்வேறு உயிர்களை வதைத்தமையால், தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அந்த வராகத்தினை அழிக்க வேண்டினர். சிவபெருமான் முருகனிடம் அந்த வராகத்தின் கொம்பினை உடைத்து வரும்படி கூற, முருகன் வராகத்தின் கொம்பினை உடைத்துவந்தார். அதனை சிவபெருமான் அணிந்து கொண்டார் என்றொரு புராணத்தினை திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.

வராக கொம்பினை அணிந்த சிவபெருமான் வடிவத்தினை தமிழகத்தில் போற்றியுள்ளனர். இந்த புராணம் வராகத்தினை அழித்தமை குறித்த தொன்மக் கதையிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1890
  2. சிவபெருமான் வராகத்தின் கொம்பை அணிந்த வரலாறு! மயிலை சிவா - தினமணி - 20th June 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக_சம்ஹார_மூர்த்தி&oldid=2119064" இலிருந்து மீள்விக்கப்பட்டது