முயலகன்
Appearance
முயலகன் எனும் உருவம் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராசர் போன்ற சிவத் தோற்றங்களில், சிவபெருமானின் காலடியில் அமைந்திருக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான், அறியாமை மற்றும் ஆணவத்தின் வடிவமான முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பாகும். [1]
முயலக நோய்
[தொகு]முயலகன் என்பது ஒரு வித வலிப்பு நோய் ஆகும். [2] முயலக நோய் கொல்லி மழவனின் மகளுக்குக் கண்டிருந்தது என்றும், அந்நோயை திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஓதி அருளிய அளவில் முயலகன் எனும் வலிப்பு நோய் தீர்ந்தது என திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகத்தின் நாற்பதாவது திருமுறை வாயிலாக அறிய இயலுகிறது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தட்சிணாமூர்த்தி
- ↑ EUdict :: Tamil-English dictionary[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "திருமுறை 44வது திருப்பதிகம் - முயலகன் தீர்த்தது". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.