சந்த்யான்ருத்த மூர்த்தி
Appearance
சந்த்யான்ருத்த மூர்த்தி என்பது சைவக்கடவுளான சிவபெருமான் அறுபத்து நான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகும். மூர்த்தி காரணம்[தொகு]அமிழ்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அதற்கு சிவபெருமானின் நாகாபரணமான வாசுகி பாம்பினை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் பயன்படுத்தினர். அதிக அழுத்ததினால் வாசுகி பாம்பு வலி தாங்காமல் ஆலகாலம் என்ற விஷத்தினை கக்கியது. அவ்விசம் தாக்கி தேவர்களும், அசுரர்களும், திருமாலும் கருகினர். அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி வேண்டி நின்றனர். சிவபெருமான் ஆலகாலத்தினை அருந்தி அனைவரையும் காத்தார். அதன் பின் சந்தியா தாண்டவத்தினை ஆடினார். இவ்வடிவம் சந்த்யான்ருத்த மூர்த்தி எனப்படுகிறது.[1] மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு]
|