சுத்த தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுத்த தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. சுத்த தாண்டவத்தினை பல்லியம் என்றும் அழைப்பர். பல்லியம் என்பது முரசாகும். இந்த முரசினை ஒலிக்க ஆடுகின்ற நடனமாக பல்லியம் கருதப்படுகிறது.[1]

தாண்டவக் காரணம்[தொகு]

தண்ட காரண்யம் எனுமிடத்தில் வாழ்ந்துவந்த முனிவர்களுக்கு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தார்கள். முனிவர்கள் தங்களை காக்கும் படி சிவபெருமானிடம் வேண்ட, சிவபெருமான் அந்த அரக்கர்களை அழித்தபின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் எட்டாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".
  2. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்த_தாண்டவம்&oldid=3357298" இலிருந்து மீள்விக்கப்பட்டது