புதுமண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுமண்டபம், கிழக்கு நுழைவாயில்
புதுமண்டபம் மேற்கு நுழைவாயில்
சித்திரைத் திருவிழா கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்

புதுமண்டபம் அல்லது வசந்த மண்டபம், மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திருமலை மன்னர் காலச் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது. [1]

அமைப்பு[தொகு]

333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், தடாதகை பிராட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், யாழிகள், குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், திருவிளையாடல் புராணக் காட்சிகள், அர்த்தநாரீசுவரர், சங்கர நாராயணன், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தி, கஜசம்கார மூர்த்திகளின் சிற்பங்களும், மண்டப நடுவரிசைத் தூண்களில் மன்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[2][3]இம்மண்டபத்தின் நடுவில் நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் அவர்களது மனைவியருடன் இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத இராயகோபுரமும், எழுகடல் தெருவும் அமைந்துள்ளது.

வசந்த விழா[தொகு]

வைகாசி மாத வசந்தோற்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, புதுமண்டபத்தின் நடுவில் உள்ள கல் மேடையில் மீனாட்சி அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

பொலிவிழந்த புதுமண்டபம்[தொகு]

370 ஆண்டுகள் பழமையும், கலைநயமிக்கதுமான புதுமண்டபம் தற்போது பொலிவிழந்து, மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், பிற பகுதிகளில் ஆடைகள் தைக்கும் தையற்கலைஞர் கடைகளும் காணப்படுகின்றன.[4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுமண்டபம்&oldid=3221762" இருந்து மீள்விக்கப்பட்டது