நாகமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகமலை என்பது மதுரைக்கு மேற்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

நாகமலை

மதுரை மாநகரம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. இதில் புராதான பெருமை வாய்ந்த மலைகளாக அமைந்திருப்பது யானைமலை, பசுமலை மற்றும் நாகமலை ஆகும். நாகமலையில் இருந்து நிறைய நீர் ஊற்றுகளும் ஓடைகளும் உருவாகின்றன. குறிப்பாக, நாக தீர்த்தம், காக்கா ஊற்று, புல் ஊற்று ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நாகமலையின் பின்புறம் நாக தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது.

இந்த மலையை தொலைவில் இருந்து பார்ப்போருக்கு இது கிடைமட்டத்தில் படுத்துறங்கும் நாகம் போல காட்சி அளிப்பதால் இம்மலைக்கு நாகமலை என்று பெயர் ஏற்பட்டது. இது தவிர இந்த மலைக்கு பல பெயர்க்காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. நகமலைக்கு வெகு அருகில் வரலாற்று சிறப்பு மிக்க சமணர் மலை அமைந்துள்ள்து. இந்த மலையடிவாரத்தில்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் வெள்ளைச்சாமி நாடர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள இந்த மலையில் ஒரு கணவாயும் அமைந்துள்ளது.

நாகமலைக்கு நேர் எதிர் திசையில் புராதான சின்னங்களான சமணர் படுகைகள் அமைந்துள்ளன. தமிழ் நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் இந்த சமணர் குகைகள் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

கல்வி[தொகு]

நாகமலை புதுக்கோட்டையில் பல்வேறு பாடசாலைகள் அமையப் பெற்றுள்ளன. நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பாடசாலைகள்:

  • 1. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி
  • 2. எஸ்.பி.ஓ.எ பதின்ம மேல்நிலைப் பள்ளி
  • 3. சிறுமலர் மேல்நிலைப் பள்ளி
  • 4. அக்‌ஷரா பதின்ம மேல்நிலைப் பள்ளி
  • 5. ச.வெள்ளைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பல்லுயிர்[தொகு]

நாகமலை மலைப் பகுதியில் இயற்கையாகவே பல்வேறு வகையான அரிய வகை பாம்பு இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2007 ஆம் ஆண்டு இந்த பகுதியில் பாம்புகளுக்கான உயிரியல் பூங்கா அமைக்க கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பாம்புகளைத் தவிர குரங்குகள், நரிகள், முயல்கள், மயில்கள், கீரிகள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

அரசு அலுவலகங்கள்[தொகு]

நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் அருகில் அமைந்துள்ளது. காவல் நிலைய தொடர்பு எண்: 0452 - 2458484

ஆரம்ப சுகாதார நிலையம் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தின் அருகில் இயங்கி வருகிறது.


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமலை&oldid=2757112" இலிருந்து மீள்விக்கப்பட்டது