வெள்ளைக்கல், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளைக்கல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளைக்கல் பகுதி மதுரைக்கு தெற்கே, விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையம், மற்றும் திட கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றால் இப்பகுதி அறியப்படுகிறது.

கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையம்[தொகு]

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியால் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் வைகை ஆற்றை மாசடையச் செய்யும் கழிவு நீரை சுத்தீகரிக்க செய்து மீண்டும் பயன்படுத்துவதாகும். தனியார் பங்களிப்புடன் 2008 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.இந்நிலையம் நவீன இயந்திரங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுத்த்தீகரிக்கபட்ட கழிவு நீர் நன்னிராக கிடைக்கிறது. சுத்தீகரிக்கபட்ட பின் கிடைக்கும் திட கழிவுகள் வயல்வெளிகளில் இயற்கை உரமாக பயன்படுகிறது.

திடக் கழிவு மேலாண்மை திட்டம்[தொகு]

இத்திட்டமும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது.மதுரை நகரில் தேங்கும் திட கழிவுகள் இங்கு கொண்டுவரப்பட்டு, மக்கும் திட கழிவுகள், மக்காத திட கழிவுகளாக பிரிக்கப்படுகிறது. மக்கும் திட கழிவுகள் நவீன இயந்திரங்கள் மூலம் சுழற்சி செய்து உரமாக மாற்றப்படுகிறது. மக்காத திட கழிவுகள் நிலத்தில் நிலத்தடி நீர் மாசுபடாத அளவிற்கு புதைக்கபடுகிறது. இம்முறைகளில் பெறப்படும் உரம் இயற்கை உரமாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்கல்,_மதுரை&oldid=2756321" இலிருந்து மீள்விக்கப்பட்டது