விளக்குத்தூண், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலேயர் ஆட்சியில், மதுரையில் நிறுவப்பட்ட விளக்குத் தூண்
பழம்பெரும் விளக்குத் தூண்

விளக்குத் தூண் (Vilakkuththun, The Lamp Post), மதுரை நகரின் பத்துத் தூண் தெரு அருகே கீழமாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. வீதியின் நடுவே அழகிய வேலைபாடுகள் மிக்க இரும்புத்தூணில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரித்தானியர்கள் காலத்தில், மதுரை நகரை விரிவாக்கம் செய்த ஆங்கிலேய ஆட்சியாளரான பிளாக்பர்ன் (John Blacburn) நினைவாக எழுப்பப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

பிரித்தானிய இந்தியா ஆட்சிக்காலத்தில், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜோஹன் பிளாக்பர்ன் என்பவர், மதுரை நகரத்தை விரிவாக்கம் செய்ய தடையாக இருந்த, மதுரையைச் சுற்றியிருந்த கோட்டைகளை இடித்து, அகழிகளை மூடும் நபர்களுக்கு, அவ்விடத்தை அவர்களுக்கே உரிமையாகும் என அறிவித்தார். இதனால் வீட்டு மனை நிலம் இல்லாதவர்கள், மதுரையைச் சுற்றிலும் இருந்த கோட்டைகளை இடித்து, அகழிகளை மூடினர். ஜோஹன் பிளாக்பர்ன் செயலைப் பாராட்டி, மதுரை நகரின் மையப் பகுதியில் (தற்போதைய காமராசர் சாலையில்) எஃகு உலோகத்திலான விளக்குத்தூணை நிறுவினர். இவ்விளக்குத்தூணில் இரவு நேரங்களில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Know your Heritage-Vilakkuththun(The Lamp Post)". http://www.dhan.org/development-matters/2013/02/know-your-heritage-madurai-athens-of-the-south/. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்குத்தூண்,_மதுரை&oldid=3571871" இருந்து மீள்விக்கப்பட்டது