மதுரைத் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் 'செந்தமிழ்' என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.

மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இச்சங்கத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு அரும்பணி ஆற்றிவருகிறது.[1] திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்களின் பெருமையே இந்தச் சங்கம் தோன்றுவதற்கு உந்து மையமாக விளங்கியது.[2]

கு. கதிரவேற்பிள்ளையால் 1800 பக்கங்களில் 63900 சொற்களில், மூன்று பாகங்கள் கொண்ட தமிழ்ச் சொல் அகராதியைத் தமிழ்ச் சங்க அகராதி எனும் பெயரால் மறு பதிப்பாக, முதல் பாகம் 1910-இலும், இரண்டாம் பாகம் 1912-இலும், மூன்றாம் பாகம் 1923-இலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டன. நான்காம் தமிழ்ச்சங்கம் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி 2012 ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற நந்தன வருடப் புத்தாண்டு விழாவில் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழ்த்தாய் விருது வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்வின்போது நான்காம் தமிழ்ச் சங்கத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க தொகையும் ஒரு கேடயமும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. சான்று
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]