அரசு சட்டக் கல்லூரி, மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை அரசு சட்டக் கல்லூரி முகப்பு

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரியும் ஒன்றாகும். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இச்சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சட்டப்படிப்பு படிப்பதற்கான மூன்று ஆண்டுகால இளநிலைச் சட்டவியல் படிப்பும், மேல்நிலைக்கல்வி படித்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்து ஆண்டு கால சட்டவியல் படிப்பும் உள்ளன.