தமுக்கம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராணியாரின் வசந்தமாளிகை
இராணியாரின் வசந்தமாளிகை உள்தோற்றம்

தமுக்கம் அரண்மனை அல்லது இராணி மங்கம்மாள் அரண்மனை தமிழ் நாடு, மதுரையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான அரண்மனையாகும்[1]. தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். 1670ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, நாயக்க வம்சத்தை சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக் நவாபிடம் இருந்தது[2]; ஆங்கிலேயோர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. 1959 இல் காந்தி அருங்காட்சியகமாக மற்றப்பட்டது.[3][4] அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானமும் இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. விக்கிமேப்பியா தளம்
  2. அருங்காட்சியக குறிப்பு
  3. தினமணி நாளிதழின் குறிப்பு
  4. David Abram (2003). South India: Rough Guide Travel Guides. Rough Guides Series (3, illustrated ed.). Rough Guides. ISBN 9781843531036. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமுக்கம்_அரண்மனை&oldid=1869726" இருந்து மீள்விக்கப்பட்டது