காந்தி அருங்காட்சியகம், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காந்தி அருங்காட்சியகம், மதுரை

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் 1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. நாதுராம் விநாயக் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.

அருங்காட்சியக தொகுப்புகள்[தொகு]

இந்திய தேசிய விடுதலை போராட்டம்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தினை விளக்கும் விதமான 265 ஒளியுணர் விளக்க நிழற்படங்கள் வரவேற்கிறன.

மகாத்மாவின் ஒளியுணர் விளக்க சரித குறிப்பு[தொகு]

அடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கி கூறும் விதமாக அமைந்த ஒளிஉணர் விளக்க குறிப்பு இருக்கின்றது. இதில் அரிய நிழற்படங்களும், ஓவியங்களும், சிற்பங்களும், குறிப்புகளும், மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் உள்ளன, மேலும் 124 காந்தியின் குழந்தை பருவ மிக அரிய நிழற்பட தொகுப்புகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசலும் நகலும்[தொகு]

இங்கு காந்திஜி உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]