லீலா காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லீலா காந்தி என்பவர் பிரவுன் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.[1]மகாத்மா காந்திக்கும் ராஜாஜிக்கும் இவர் கொள்ளுப் பெயர்த்தி ஆவார்

பிறப்பும் படிப்பும்[தொகு]

மும்பையில் பிறந்த லீலா காந்தி, தில்லி பல்கலைக்கழக இந்துக் கல்லூரயில் இளங்கலைப் படிப்பும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பலியோல் கல்லூரியில் ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

பணிகள்[தொகு]

பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணியில் சேருவதற்கு முன் சிகாகோ பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ல டுரோப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக இருந்தார். பின்னைக் குடியேற்ற நாடுகளைப் பற்றியும் அந்நாடுகளின் மொழி, நாகரிகம், பண்பாடு அரசியல் மாற்றங்கள் ஆகியன பற்றியும் ஆய்வு செய்தார். மின்னிதழான போஸ்ட் கலோனியல் டெக்ஸ்ட் என்பதன் ஆசிரியராக இருந்தார். இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் மகாத்மா காந்தி மற்றும் இராசகோபாலச்சாரி கொள்ளுப் பெயர்த்தியும், தேவதாஸ் காந்தியின் பெயர்த்தியும், இராமச்சந்திர காந்தியின் மகளும் ஆவார்.[2]

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_காந்தி&oldid=2721038" இருந்து மீள்விக்கப்பட்டது