ராஜ்காட்

ஆள்கூறுகள்: 28°38′26″N 77°14′58″E / 28.640550°N 77.249433°E / 28.640550; 77.249433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்காட், மகாத்மா காந்தியின் நினைவிடம்

ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ளது.[1][2] காந்தியின் படுகொலைக்குப் பின் அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.

ராஜ்காட் பகுதியில் அமைந்த பிற முக்கிய நினைவிடங்கள்[தொகு]

சக்தி ஸ்தல், இந்திரா காந்தி நினைவிடம்
வீர பூமி, ராஜீவ் காந்தி நினைவிடம்

ராஜ்காட் எனும் வடமொழி சொல்லிற்கு அரசர்களின் படித்துறை என்று பொருள். யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் அமைந்த நினைவிடங்களில், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி நினைவிடங்கள் புகழ்பெற்றவை.

ராஜ்காட் பகுதியில் அமைந்த நினைவிடங்கள்[தொகு]

ராஜ்காட் தொடர்பான நினைவிடங்கள்;

பெயர் பதவி / பட்டம் மறைந்த ஆண்டு நினைவிடப் பெயர் பொருள் Area
(in acres)[3]
சிறப்பு
மகாத்மா காந்தி தேசத் தந்தை 1948 ராஜ்காட் மன்னர்களின் படித்துறை 44.35 கரும் பளிங்குக் கல் மேடை
ஜவகர்லால் நேரு இந்தியப் பிரதமர் 1964 சாந்திவனம் அமைதியின் தோட்டம் 52.6 நீண்ட அகலமான புல்வெளிகள் கொண்ட தோட்டம்
லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமர் 1966 விஜய்காட் வெற்றி மேடை 40 லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்திய வெற்றியின் நினைவாக
சஞ்சய் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் 1980 சாந்திவனத்திற்கு அருகில்
இந்திரா காந்தி இந்தியப் பிரதமர் 1984 சக்தி ஸ்தல் சக்தியின் பிறப்பிடம் 45 சிவப்பு-சாம்பல் நிறம் கலந்த ஒற்றை கல்
ஜெகசீவன்ராம் இந்தியத் துணைப் பிரதமர் 1986 சம்தா ஸ்தல் சமத்துவமிடம் 12.5
சரண் சிங் இந்தியப் பிரதமர் 1987 கிசான் காட் விவசாயிகளின் மேடை 19
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமர் 1991 வீர் பூமி வீரத்தின் விளைநிலம் 15 பெரிய தாமரையைச் சுற்றி 46 சிறு தாமரைகள் கொண்ட மேடை [3]
ஜெயில் சிங் இந்தியக் குடியரசுத் தலைவர் 1994 ஏக்தா ஸ்தல் ஒற்றுமையின் உறைவிடம் 22.56
சங்கர் தயாள் சர்மா[4] இந்தியக் குடியரசுத் தலைவர் 1999 கர்ம பூமி கர்ம பூமி விஜய்காட் அருகில்
சந்திரசேகர் இந்தியப் பிரதமர் 2007 ஜனநாயக் ஸ்தல்[5] மக்கள் தலைவரின் நினைவிடம்
ஐ. கே. குஜரால் இந்தியப் பிரதமர் 2012 இராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் தேசிய நினைவிடம்
தேவிலால் இந்தியத் துணைப் பிரதமர் 2001 சங்கர்ஷ் ஸ்தல் போரின் பிறப்பிடம் கிசான் காட் அருகில்
பி. வி. நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமர் 2004 ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல் தேசிய நினைவிடம்
அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியப் பிரதமர் 2018 ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்[6] [7] தேசிய நினைவிடம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்காட்&oldid=3784700" இலிருந்து மீள்விக்கப்பட்டது