உள்ளடக்கத்துக்குச் செல்

காந்திகிராமம்

ஆள்கூறுகள்: 10°16′54″N 77°55′47″E / 10.2817°N 77.9296°E / 10.2817; 77.9296
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்திகிராமம்
காந்திகிராமம்
அமைவிடம்: காந்திகிராமம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°16′54″N 77°55′47″E / 10.2817°N 77.9296°E / 10.2817; 77.9296
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


324.79 மீட்டர்கள் (1,065.6 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.gandhigram.org/


காந்திகிராமம் என்பது தமிழ்நாட்டில் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH-7), திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மாதிரி கிராமம். இக்கிராமம், சிறுமலை அடிவாரத்தில், இரு ஓடைகளின் நடுவே, இயற்கை எழிலார்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

காந்தியடிகளின் கிராமியப் பொருளாதாரக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்தில் திருமதி டாக்டர். டி. எஸ். சௌந்தரம் அம்மையார், அவரது கணவர் திரு. ஜி. இராமச்ச்சந்திரன் ஆகியோர் முயற்சியால் 1947 ஆம் வருடம் காந்திகிராமம் உருவாக்கப்பட்டது.

காந்திகிராம அறக்கட்டளை

[தொகு]

காந்திகிராமம் என்ற மாதிரி கிராமத்தை நிறுவுவதற்கு இடம் கொடுத்து உதவியதில், அருகாமையில் உள்ள சின்னாளபட்டி மக்களின் பங்கு முக்கியமானது ஆகும். சௌந்தரம் அம்மையார் முதலில் இங்கு ஓர் ஆரம்பப் பள்ளியைத் துவங்கினார். இந்த சிறு தொடக்கம், படிப்படியாக வளர்ச்சி பெற்று காந்திகிராம அறக்கட்டளை உருவானது.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

[தொகு]
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வளாகம்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University - GRI), 1956-ல், ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1976-ல் நிகர்நிலைப் பல்கலைகழகமாக முன்னேற்றம் அடைந்தது. இப்பல்கலைக்கழகம் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.

காந்திகிராமப் பாடல்

[தொகு]

"இதய நடுவினில் என்றும் போற்றும்,

எங்கள் காந்திகிராமம், இது எமது காந்திகிராமம்

சிறுமலை மீது கருமுகில் சூழ்ந்து,

சீதளத் துளிகள் வீசிடும் வேளை... (சிறுமலை)

இருசிறு ஓடைகள் இனிய பாடலை... (இருசிறு)

இசைத்து மகிழ்ந்து முறுவல்கள் பூக்கும்

எங்கள் காந்திகிராமம், இது எமது காந்திகிராமம்"

இவற்றையும் காண்க

[தொகு]

காந்திகிராமம் குறித்த முக்கிய இணைப்புகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திகிராமம்&oldid=3811202" இலிருந்து மீள்விக்கப்பட்டது