தாவர உணவுமுறை
(தாவர உணவு முறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவர உணவு முறை[1] அல்லது மரக்கறி உணவு முறை (காய்கறிகள் சார்ந்த உணவு முறை) அல்லது சைவ உணவு முறை என்பது உணவில் மீன், இறைச்சி வகைகளை தவிர்ப்பதாகும். சில தனி தாவர உணவுக்கார்கள் பால், தயிர், தேன் போன்ற விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவுகளையும் தவிர்ப்பர் (எ.கா. நனிசைவம்). மேலும் சிலர் பூண்டு, வெங்காயம் போன்ற வேர்த் தாவரங்களையும் தவிர்ப்பர் (எ.கா. சமணம் மற்றும் பிராமணம் உள்ளிட்ட மதநம்பிக்கை சார்ந்த சைவ உணவுமுறைகள்).
பொருளாதாரம், உடல்நலம், சமயம், பண்பாடு, அறவியல் எனப் பல காரணங்களுக்காகத் தாவர உணவு முறையைப் பலர் பின்பற்றுகின்றார்கள்.
இவற்றையும் காண்க[தொகு]
சான்று[தொகு]
- ↑ தாவர உணவு முறை மருத்துவக் களஞ்சியம்-தமிழ் இணையப் பல்கலைக்கழகம்[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்து பரணிடப்பட்ட நாள் 06-06-2009