டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்சின் கியாட்சோ
Tenzin Gyatso :பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்
திபெத்தின் 14வது தலாய் லாமா
Dalai Lama 1430 Luca Galuzzi 2007crop.jpg
ஆட்சிநவம்பர் 17 1950–இற்றைவரை
முடிசூட்டு விழாநவம்பர் 17 1950
முன்னிருந்தவர்துப்டென் கியாட்சோ
முழுப்பெயர்
ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ
திபெத்திய மொழிབསྟན་འཛིན་རྒྱ་མཚོ་
மரபுதலாய் லாமா
தந்தைசோக்கியோங் செரிங்க்
தாய்டிக்கி செரிங்க்

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/ བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 6, 1935) திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார்[1]. இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆங்கில நூலில் (The Universe in a Single Atom) குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்.

இவர் 1989 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்[2].

15வது புதிய தலாய் லாமா[தொகு]

மார்ச் 2023ல் தற்போதைய தலாய் லாமா, மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் வாழும் தம்பதியரின் 8 வயது சிறுவனை தனது வாரிசு ஆக தரம்சாலாவில் அறிவித்தார். [3][4][5][6]இச்சிறுவன் மங்கோலியாவின் 9வது பௌத்த குரு கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சியின்[7] அவதாரம் என தலாய் லாமா அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""The 14th Dalai Lama - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. ""The 14th Dalai Lama - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயது சிறுவனை அறிவித்தார் தலாய்லாமா?
  4. Dalai Lama names US-born Mongolian boy as 3rd highest spiritual leader
  5. Dalai Lama Names 8-Year-Old US-Born Mongolian Boy 3rd Highest Leader in Buddhism
  6. Dalai Lama recognises 8-year-old US-born Mongolian boy as one of the highest Buddhist spiritual leaders
  7. 9th Jebtsundamba Khutughtu