மரியா இரேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா இரேசா
Maria Ressa
Maria Ressa.jpg
2011 இல் இரேசா
பிறப்பு2 அக்டோபர் 1963 (1963-10-02) (அகவை 59)
மணிலா, பிலிப்பீன்சு
குடியுரிமைபிலிப்பீன்சு,
ஐக்கிய அமெரிக்கா
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (BA), பிலிப்பீன்சு திலிமான் பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர், நூலாசிரியர்
அறியப்படுவதுஇராப்பிலர் பத்திரிகையின் நிறுவனர்
விருதுகள்சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது (2018)
யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது (2021)
அமைதிக்கான நோபல் பரிசு (2021)
வலைத்தளம்
அதிகாரபூர்வ தளம்

மரியா அஞ்சலீட்டா இரேசா (Maria Angelita Ressa, பிறப்பு: அக்டோபர் 2, 1963) பிலிப்பீனிய-அமெரிக்கப் பத்திரிகையாளரும், நூலாசிரியரும், 'இராப்பிலர்' இணையவெளிப் பத்திரிகையின் பணிப்பாளரும் ஆவார்.[1] இவர் முன்னதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திற்காக தென்கிழக்காசியாவின் முன்னணி புலனாய்வு செய்தியாளராக இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றியுள்ளார்.

2020-இல், சர்ச்சைக்குரிய பிலிப்பீன்சு இணையவெளிக் குற்ற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்[2][3] அந்நாட்டு அரசாங்கத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.[4][5] இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என மனித உரிமை அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களால் கண்டனம் செய்யப்பட்டது.[6][7][8]

இவருக்கு 2021-இற்கான அமைதிக்கான நோபல் பரிசு உருசிய ஊடகவியலாளர் திமீத்திரி முராத்தொவுடன் இணைந்து "சனநாயகம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்நிபந்தனையான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" வழங்கப்பட்டது.[9][10]

டைம்'இன் போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களின் தொகுப்பில் இரேசா 2018 ஆம் ஆண்டின் சிறந்த நபராகச் சேர்க்கப்பட்டார். 2013 பிப்ரவரி 13 அன்று, இவரது ராப்பிலர் பத்திரிகை தொழிலதிபர் வில்பிரெடோ கெங் குறித்து ஒரு தவறான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். 2020 சூன் 15 அன்று, மணிலாவில் உள்ள ஒரு நீதிமன்றம் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[5] இரேசா பிலிப்பீனிசின் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தேயின் வெளிப்படையான விமர்சகராக இருப்பதால், அவரது கைதும் தண்டனையும் எதிர்க்கட்சிகளினாலும், சர்வதேச சமூகத்தினராலும் துதெர்த்தே அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகப் பார்க்கப்பட்டது.[11][12][13] எல்லைகளற்ற செய்தியாளர்களால் தொடங்கப்பட்ட தகவல், சனநாயக ஆணையத்தில் 25 முன்னணி நபர்களில் இரேசாவும் ஒருவர்.[14]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Arsenault, Adrienne (April 27, 2017). "'Democracy as we know it is dead': Filipino journalists fight fake news". CBC News. http://www.cbc.ca/news/world/democracy-as-we-know-it-is-dead-filipino-journalists-fight-fake-news-1.4086920. 
 2. "Philippines: Maria Ressa's cyber libel verdict 'a method of silencing dissent'" (in en-GB). Deutsche Welle (www.dw.com). 2020-06-15. https://www.dw.com/en/philippines-maria-ressas-cyber-libel-verdict-a-method-of-silencing-dissent/a-53811284. 
 3. "Philippine cybercrime law takes effect amid protests". BBC. October 3, 2012. https://www.bbc.com/news/technology-19810474. 
 4. Regencia, Ted (2020-06-15). "Maria Ressa found guilty in blow to Philippines' press freedom" (in en). aljazeera.com. https://www.aljazeera.com/news/2020/6/15/maria-ressa-found-guilty-in-blow-to-philippines-press-freedom. 
 5. 5.0 5.1 Ratcliffe, Rebecca (June 15, 2020). "Maria Ressa: Rappler editor found guilty of cyber libel charges in Philippines" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2020/jun/15/maria-ressa-rappler-editor-found-guilty-of-cyber-libel-charges-in-philippines. 
 6. "Philippines: CFWIJ condemns cyber libel conviction of Maria Ressa". The Coalition For Women In Journalism (ஆங்கிலம்). 2020-06-15. 2020-06-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 7. "US Senators Durbin, Markey, Leahy slam Ressa libel verdict". Philippine Daily Inquirer (ஆங்கிலம்). 2020-06-17. 2020-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 8. Cabato, Regine (June 15, 2020). "Conviction of Maria Ressa, hard-hitting Philippine American journalist, sparks condemnation". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/world/asia_pacific/maria-ressa-rappler-filipino-american-journalist-guilty-cyber-libel-prison/2020/06/14/0dc58872-ae9c-11ea-98b5-279a6479a1e4_story.html. 
 9. "The Nobel Peace Prize 2021". NobelPrize.org. October 8, 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 8, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 "Hektisk nomineringsaktivitet før fredsprisfrist". Dagsavisen. 31 January 2021. https://www.dagsavisen.no/nyheter/verden/hektisk-nomineringsaktivitet-for-fredsprisfrist-1.1827991. 
 11. Leung, Hillary (February 14, 2019). "Philippines Journalist Maria Ressa Released on Bail After Arrest for 'Cyber Libel'". Time. February 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. Gonzales, Cathrine (2020-06-15). "Robredo: Ressa's cyber libel conviction a threat to Filipinos' freedom". Philippine Daily Inquirer. 2020-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 13. Dancel, Raul (2020-06-15). "Court finds prominent Philippine journalist and Duterte critic Maria Ressa guilty of cyber-libel". https://www.straitstimes.com/asia/se-asia/philippine-journalist-maria-ressa-critical-of-president-rodrigo-duterte-convicted-of. 
 14. "Maria A. Ressa | Reporters without borders". RSF. September 9, 2018. June 15, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 15. Albeanu, Catalina (June 7, 2018). "Maria Ressa, executive editor of Rappler, receives Golden Pen of Freedom". Journalism.co.uk. https://www.journalism.co.uk/news/maria-ressa-executive-editor-of-rappler-receives-golden-pen-of-freedom/s2/a722933/. 
 16. "Maria Ressa". Committee to Protect Journalists (ஆங்கிலம்). 2020-06-23 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Metro News Today: Rappler's Maria Ressa among TIME's Person of the Year 2018". League Online News. https://leagueonlinenews.com/news/rapplers-maria-ressa-among-times-person-of-the-year-2018/. 
 18. Vick, Karl (December 11, 2018). "TIME Person of the Year 2018: The Guardians". Time. http://time.com/person-of-the-year-2018-the-guardians/. 
 19. "Maria Ressa: The 100 Most Influential People of 2019". TIME. June 15, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 20. "BBC 100 Women 2019: Who is on the list this year?". BBC News. October 16, 2019.
 21. "Embattled Philippine journalist wins UN press prize". யாகூ! செய்திகள். Agence France-Presse. 27 April 2021. Archived from the original on 27 ஏப்ரல் 2021. https://web.archive.org/web/20210427162819/https://au.news.yahoo.com/embattled-philippine-journalist-wins-un-161430616.html. 
 22. "Flere fredsprisforslag før fristen gikk ut". Aftenposten. Norwegian News Agency. 31 January 2021. https://www.aftenposten.no/norge/politikk/i/jBL23A/flere-fredsprisforslag-foer-fristen-gikk-ut. 
 23. "The Nobel Peace Prize 2021". NobelPrize.org (ஆங்கிலம்). October 8, 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மரியா இரேசா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_இரேசா&oldid=3669207" இருந்து மீள்விக்கப்பட்டது