டெனிசு முக்வேகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெனிசு முக்வேகி
Denis Mukwege
2014 இல் முக்வேகி
பிறப்பு1 மார்ச்சு 1955 (1955-03-01) (அகவை 68)
புக்காவு, பெல்ஜிய காங்கோ
தேசியம்காங்கோ மக்களாட்சிக் குடியரசு
படித்த கல்வி நிறுவனங்கள்புருண்டி பல்கலைக்கழகம்
ஆங்கர்சு பல்கலைக்க்ழகம்
பணிபெண்நோயியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1983-இன்று
விருதுகள்ரைட் லவ்லிவுட் விருது
டைம் 100
சாகரவ் பரிசு
செவாலியே விருது
அமைதிக்கான நோபல் பரிசு (2018)

டெனிசு முக்வேகி (Denis Mukengere Mukwege, /mʊkˈwɡi/;[1] பிறப்பு: மார்ச் 1, 1955)[2][3] என்பவர் காங்கோவைச் சேர்ந்த பெண்நோயியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புக்காவு நகரில் பான்சி மருத்துவமனையை ஆரம்பித்து, அங்கு ஆயுதக்குழுக்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட காங்கோ பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.[4] இரண்டாவது காங்கோ போர்க் காலத்தில் (1998 - 2003) இருந்து பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 10 சத்திர சிகிச்சைகள் வரை இவர் இங்கு மேற்கொண்டுள்ளார்.[4] வன்கலவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களில் இவர் உலகில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[5]

2018 ஆம் ஆண்டில், இவருக்கும், ஈராக்கைச் சேர்ந்த நாதியா முராத் என்பவருக்கும் "போர் மற்றும் ஆயுத மோதல்களில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனிசு_முக்வேகி&oldid=3816087" இருந்து மீள்விக்கப்பட்டது