உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்

ஆள்கூறுகள்: 46°13′39″N 6°08′14″E / 46.2274°N 6.1373°E / 46.2274; 6.1373
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம்
International Committee of the Red Cross
Comité international de la Croix-Rouge
துவங்கியது17 பெப்ரவரி 1863; 161 ஆண்டுகள் முன்னர் (1863-02-17)
வகைபன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்பு
Purpose/focusமோதல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தலும், அவர்களுக்கு உதவி வழங்குதலும்
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள்46°13′39″N 6°08′14″E / 46.2274°N 6.1373°E / 46.2274; 6.1373
Region servedஉலகளாவியது
தலைவர்மிர்சானா இசுபொல்சாரிச் எகர்
துணைத் தலைவர்கிலெசு கார்போனியர்
பணிப்பாளர்இராபர்ட் மர்தீனி
வரவுசெலவுCHF 1576.7 மில்லியன் (2016)[1]
203.7 m for headquarters
1462.0 m for field operations
வலைத்தளம்www.icrc.org

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross, ICRC; பிரெஞ்சு மொழி: Comité International de la Croix-Rouge) என்பது சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பு மூன்று முறை நோபல் பரிசைப் பெற்றுள்ளது. 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளும், 1977 (நெறிமுறை I, நெறிமுறை II) மற்றும் 2005 இன் கூடுதல் நெறிமுறைகளும், பன்னாட்டு, உள் ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஆணையை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கியுள்ளன. இத்தகைய பாதிக்கப்பட்டவர்களில் போரில் காயமடைந்தவர்கள், கைதிகள், ஏதிலிகள், பொதுமக்கள் மற்றும் பிற போராளிகள் அல்லாதவர்கள் உள்ளனர்.[2]

பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம், செஞ்சிலுவை, செம்பிறை இயக்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (IFRC), 191 தேசிய சங்கங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும்.[3] செஞ்சிலுவைச் சங்கம் இவ்வியக்கத்தில் உள்ள மிகப் பழமையானதும், மிகவும் மரியாதைக்குமுரிய அமைப்பாகும், அத்துடன் உலகில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும். இது மூன்று அமைதிக்கான நோபல் பரிசுகளை 1917, 1944, 1963 ஆண்டுகளில் வென்றுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annual Report 2016, Key facts and figures" (PDF).
  2. "Discover the ICRC". 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12. p.6.
  3. "National Society Directory - IFRC". பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
  4. "Nobel Laureates Facts – Organizations". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.

வெளி இணைப்புகள்

[தொகு]