டெசுமான்ட் டுட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேதகு
டெசுமான்ட் டுட்டு
கேப் டவுன் நகரின் முன்னால் பேராயர்
DesmondTutuDec10.jpg
திசம்பர் 2010இல் டுட்டு
மறைமாநிலம்தென்னாபிரிக்காவின் ஆங்கிலேயத் திருச்சபை
ஆட்சி பீடம்கேப் டவுன் மறைமாவட்டம் (ஓய்வு)
ஆட்சி துவக்கம்7 செப்டம்பர் 1986
ஆட்சி முடிவு1996
முன்னிருந்தவர்பி.டபுள்யூ. ஆர். ரசல்
பின்வந்தவர்ஙோங்கோங்குலு டுங்கேன்
பிற பதவிகள்லெசோதோ ஆயர்
ஜோகன்னேஸ்பேர்க் ஆங்கிலிக்க திருச்சபை ஆயர்
கேப்டவுன் பேராயர்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1960
பிற தகவல்கள்
பிறப்பு7 அக்டோபர் 1931 (1931-10-07) (அகவை 90)
கீர்க்ஸ்டோர்ப், மேற்கு டிரான்ஸ்வால் மாநிலம், தென்னாபிரிக்கா

டெசுமான்ட் பைலோ டுட்டு (Desmond Mpilo Tutu, பிறப்பு : அக்டோபர் 7, 1931)[1] ஓர் தென்னாபிரிக்க செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார். 1980களில் இனவொதுக்கலுக்கு எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவராவார்.

மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் அடக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது மதிப்புமிகு பெயரைப் பயன்படுத்தியும் செயல்திறனாளராக விளங்கினார். எய்ட்சு, காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியுள்ளார் . இஸ்ரேல் நாட்டால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை சொன்னார். "நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப் பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான 'நோக்கத்துக்கான இழப்பு" என்றார். 1984ஆம் ஆண்டு டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்[2]. தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான ஆல்பர்ட் சுவைட்சர் பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார்.[3] 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தனது மேடைப்பேச்சுக்களையும் மேற்கோள்களையும் டுட்டு பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ""Desmond Tutu - Curriculum Vitae".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Desmond Tutu - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  3. "Tutu to be honoured with Gandhi Peace Award". பார்த்த நாள் 11 November 2008.

மேலும் படிக்க[தொகு]

  • Shirley du Boulay, Tutu: Voice of the Voiceless (Eerdmans, 1988).
  • Michael J. Battle, Reconciliation: The Ubuntu Theology of Desmond Tutu (Pilgrim Press, 1997).
  • Steven D. Gish, Desmond Tutu: A Biography (Greenwood, 2004).
  • David Hein, "Bishop Tutu's Christology." Cross Currents 34 (1984): 492–99.
  • David Hein, "Religion and Politics in South Africa." Modern Age 31 (1987): 21–30.
  • John Allen, Rabble-Rouser for Peace: The Authorised Biography of Desmond Tutu (Rider Books, 2007).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசுமான்ட்_டுட்டு&oldid=3267362" இருந்து மீள்விக்கப்பட்டது