உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிம்மி கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம்மி கார்ட்டர்
Jimmy Carter
1978 இல் கார்ட்டர்
ஐக்கிய அமெரிக்காவின் 39-ஆவது அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 1977 – சனவரி 20, 1981
துணை அதிபர்வால்ட்டர் மாண்டேல்
முன்னையவர்ஜெரால்ட் ஃபோர்ட்
பின்னவர்ரானல்ட் ரேகன்
ஜார்ஜியா மாநில ஆளுநர்
பதவியில்
சனவரி 12, 1971 – சனவரி 14, 1975
ஜார்ஜியா மாநில 14-ஆவது மாவட்டத்திற்கான மேலவை உறுப்பினர்
பதவியில்
சனவரி 14, 1963 – சனவரி 9, 1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
யேம்சு ஏர்ல் கார்ட்டர், இளை.

(1924-10-01)அக்டோபர் 1, 1924
பிளெயின்சு, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 29, 2024(2024-12-29) (அகவை 100)
பிளெயின்சு, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்(கள்)
ரொசலின் சிமித்
(தி. 1946; இற. 2023)
பிள்ளைகள்4
பெற்றோர்
  • யேம்சு ஏர்ல் கார்ட்டர் மூத்.
  • பெசி லில்லியன் கோர்டி
கல்விஅமெரிக்கக் கடற்படை அகாதமி, (இ.அ)
கையெழுத்து
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்கக் கடற்படை
சேவை ஆண்டுகள்
  • 1946–1953 (செயலில்)
  • 1953–1961 (ரிசர்வ்)
தரம்லெப்டினண்ட்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்

ஜேம்சு ஏர்ல் கார்ட்டர் இளை. (James Earl Carter Jr., 1 அக்டோபர் 1924 – 29 திசம்பர் 2024) அமெரிக்க அரசியல்வாதியும், மனித நேயரும் ஆவார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பணியாற்றினார். இவர் அமெரிக்க அரசுத்தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்தவரும், அகவை 100 ஐ எட்டிய ஒரே அரசுத்தலைவரும் ஆவார்.

கார்ட்டர் சியார்சியா மாநிலத்தில் "பிளெயின்சு" என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.[1] அவர் 1946 இல் அமெரிக்கக் கடற்படை கல்விக்கழகத்தில் பட்டம் பெற்று,[2][3] அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் சேவையில் சேர்ந்தார்.[4] கார்ட்டர் தனது இராணுவ சேவைக்குப் பிறகு வீடு திரும்பினார். சியார்சிய மாநில அரசியலில் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்பு தனது குடும்பத் தொழிலான வேர்க்கடலை வளர்க்கும் தொழிலைப் புதுப்பித்தார்.[5] சியார்சியாவில் மாநில மேலவை உறுப்பினராகவும் இருந்தார்,[6] இதன்போது குடிசார் உரிமைகள் இயக்கத்தை ஆதரித்தார்.{sfn|Ryan|2006|p=37}} 1976 அரசுத்தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அரசுத்தலைவர் செரால்ட் போர்டைத் தோற்கடித்தார்.[7]

கார்ட்டர் அரசுத்தலைவராகப் பதவியேற்ற இரண்டாவது நாளில் வியட்நாம் போர் வரைவு ஏய்ப்பவர்களை மன்னித்தார்,[8][9] கேம்ப் டேவிட் உடன்படிக்கைகள், பனாமாக் கால்வாய் ஒப்பந்தங்கள், இரண்டாம் சுற்று மூலோபாய ஆயுத வரம்பு பேச்சுக்களை வெற்றிகரமாகத் தொடர்ந்தார். இவரது நிர்வாகம் அமெரிக்க எரிசக்தி, கல்வித் துறைகளை நிறுவியது. இவரது பதவிக்கால முடிவானது ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி, ஆற்றல் நெருக்கடி (தேக்கநிலையை ஏற்படுத்தியமை), சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானித்தான் படையெடுப்பிற்குப் பிறகு,[10] தானியத் தடை, கார்ட்டர் கோட்பாடு, 1980 மாஸ்கோ ஒலிம்பிக் புறக்கணிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. கார்ட்டர் 1980 சனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் எட்வர்ட் கென்னடியைத் தோற்கடித்தார், ஆனால் 1980 பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ரானல்ட் ரேகனிடம் தோற்றார்.[11]

அரசுத்தலைவர் பதவிக்குப் பிந்தைய காலத்தில், கார்ட்டரின் அறக்கட்டளை (கார்ட்டர் மையம்)[12] அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உதவியது, உலகளவில் தேர்தல்களைக் கண்காணித்தது, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கு சிகிச்சை அளித்தது. கார்ட்டர் மையம் பல முக்கிய குடற்புழு நீக்கம், நோய் ஒழிப்பு முயற்சிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது.[13] இதில் நரம்பு சிலந்தி நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரப்புரை (கார்ட்டரின் இறுதி விருப்பம் அவர் இறப்பதற்கு முன் கடைசி கினிப் புழு இறப்பதைக் காண வேண்டும் என்பதுதான்.[14]) கார்ட்டரின் படைப்புகள் அரசியல் நினைவுகள், உலகளாவிய விவகாரங்கள் முதல் கவிதை வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. வரலாற்றாசிரியர்களும், கருத்துக் கணிப்புகளும் கார்ட்டரின் அரசுத்தலைவர் பதவிக்கு கலவையான மதிப்பீடுகளை வழங்கியிருந்தன, ஆனால் அவரது பதவிக்கு பிந்தைய காலம் (அமெரிக்க வரலாற்றில் மிக நீண்டது) 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு உட்பட உலகளாவிய பாராட்டைப் பெற்றது.[15]

கார்ட்டர் சியார்ச்சியாவில் உள்ள அவரது இல்லத்தில் 2024 திசம்பர் 29 அன்று, தனது 100-ஆவது அகவையில், காலமானார்.[16][17][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Godbold 2010, ப. 9.
  2. Hobkirk 2002, ப. 38.
  3. Balmer 2014, ப. 34.
  4. Thomas 1978, ப. 18.
  5. Kaufman 2016, ப. 66.
  6. Bourne 1997, ப. 108–132.
  7. "Carter Appears Victor Over Ford". Toledo Blade. November 3, 1976 இம் மூலத்தில் இருந்து November 22, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211122194136/https://news.google.com/newspapers?nid=8_tS2Vw13FcC&dat=19761103&printsec=frontpage. 
  8. "Executive Orders". archives.gov. October 25, 2010. Archived from the original on September 22, 2021. பார்க்கப்பட்ட நாள் September 8, 2021.
  9. "Online NewsHour: Remembering Vietnam: Carter's Pardon". பொது ஒளிபரப்புச் சேவை. Archived from the original on February 28, 2007. பார்க்கப்பட்ட நாள் September 8, 2021.
  10. Kaplan, Robert D. (2008). Soldiers of God: With Islamic Warriors in Afghanistan and Pakistan. Knopf Doubleday. pp. 115–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-54698-2.
  11. Kazin, Michael; Edwards, Rebecca; Rothman, Adam (November 9, 2009). The Princeton Encyclopedia of American Political History. (Two volume set). Princeton University Press. p. 311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-3356-6. Archived from the original on July 5, 2023. பார்க்கப்பட்ட நாள் March 21, 2022.
  12. "Timeline and History of The Carter Center [1981–1989]". The Carter Center. Archived from the original on November 1, 2009. பார்க்கப்பட்ட நாள் October 27, 2017.
  13. "African worm disease from dirty water nearly eradicated, says Jimmy Carter". CBS News. January 11, 2017 இம் மூலத்தில் இருந்து November 21, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211121080137/https://www.cbsnews.com/news/guinea-worm-disease-nearly-eradicated-jimmy-carter-says/. 
  14. Kliff, Sarah (August 20, 2015). "President Jimmy Carter's amazing last wish". Vox. பார்க்கப்பட்ட நாள் December 29, 2024.
  15. Nobel Foundation(October 11, 2002). "The Nobel Peace Prize for 2002 to Jimmy Carter". செய்திக் குறிப்பு.
  16. Sullivan, Kevin; Walsh, Edward (December 29, 2024). "Jimmy Carter, 39th president and Nobel Peace Prize winner, dies at 100, his son says". The Washington Post. https://www.washingtonpost.com/obituaries/2024/12/29/jimmy-carter-president-dead/. 
  17. Zurcher, Anthony; Geoghegan, Tom (December 29, 2024). "Jimmy Carter, former US president, dies aged 100". BBC News. https://www.bbc.com/news/articles/cpww85w5p30o. 
  18. "Former U.S. President Jimmy Carter Passes Away at 100". Carter Center. December 29, 2024. https://www.cartercenter.org/news/pr/2024/statement-on-president-jimmy-carter-122924.html. 

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_கார்ட்டர்&oldid=4178554" இலிருந்து மீள்விக்கப்பட்டது