ஜெரால்ட் ஃபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரால்ட் ஃபோர்டு
ஆகத்து 1974இல் போர்டு
38வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஆகத்து 9, 1974 – சனவரி 20, 1977
துணை குடியரசுத் தலைவர் எவருமிலர் (ஆக–திச 1974)
நெல்சன் ராக்கெபெல்லர் (1974–77)
முன்னவர் ரிச்சர்ட் நிக்சன்
பின்வந்தவர் ஜிம்மி கார்ட்டர்
40வது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்
பதவியில்
திசம்பர் 6, 1973 – ஆகத்து 9, 1974
குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னவர் இசுபைரோ அக்நியூ
பின்வந்தவர் நெல்சன் ராக்கெபெல்லர்
கீழவை சிறுபான்மைத் தலைவர்
பதவியில்
சனவரி 3, 1965 – திசம்பர் 6, 1973
கொறடா லெசுலீ சீ. அரென்ட்சு
முன்னவர் சார்லசு ஏ. ஆல்லக்
பின்வந்தவர் ஜான் ஜக்கப் ரோட்சு
மிச்சிகன் மாநில 5வது மாவட்டத்துக்கான கீழவை உறுப்பினர்
பதவியில்
சனவரி 3, 1949 – திசம்பர் 6, 1973
முன்னவர் பார்டெல் ஜே. யோன்க்மேன்
பின்வந்தவர் ரிச்சர்டு வான்டெர் வீன்
தனிநபர் தகவல்
பிறப்பு லெசுலீ லின்ச் கிங் ஜூனியர்.
சூலை 14, 1913(1913-07-14)
ஒமாகா, நெப்ராஸ்கா, ஐ.அ.
இறப்பு திசம்பர் 26, 2006(2006-12-26) (அகவை 93)
ராஞ்சோ மிராஜ், கலிபோர்னியா, ஐ.அ.
அடக்க இடம் ஜெரால்டு ஆர். போர்டு அருங்காட்சியகம்
கிராண்டு ராபிட்சு, மிச்சிகன்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
பெட்டி புளூமர்
(தி. 1948; மரணம் 2006)
பிள்ளைகள் மைக்கேல், ஜான், இசுடீவன், & சூசன்
படித்த கல்வி நிறுவனங்கள் மிச்சிகன் பல்கலைக்கழகம் (இளங்கலை)
யேல் சட்டப் பள்ளி (கௌரவ டாக்டர்)
தொழில் வழக்கறிஞர்
அரசியல்வாதி
சமயம் மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர்
விருதுகள் ஆசியாடிக்-பசிபிக் போர் பதக்கம்
அமெரிக்கப் போர் பதக்கம்
இரண்டாம் உலகப் போர் வெற்றிப் பதக்கம்
கையொப்பம் ஜெரால்ட் ஆர். போர்டு
படைத்துறைப் பணி
பற்றிணைவு  ஐக்கிய அமெரிக்கா
கிளை  அமெரிக்கக் கடற்படை
பணி ஆண்டுகள் 1942–46
தர வரிசை லெப்.கமாண்டர்
சமர்கள்/போர்கள் இரண்டாம் உலகப் போர்

ஜெரால்டு ருடோல்ஃப் ஃபோர்டு இளையவர் (Gerald Rudolph Ford Jr., பிறப்பு: லெசுலி லிஞ்ச் கிங் இளையவர்.; சூலை 14, 1913 – திசம்பர் 26, 2006) 1974 முதல் 1977 வரை 38வது குடியரசுத் தலைவராக இருந்த அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இதற்கு முன்னதாக 40வது துணைக் குடியரசுத் தலைவராக பணியாற்றியவர். 1973 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த போர்டு 1974இல் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகியதை அடுத்து ஆகத்து 9, 1974இல் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25ஆவது திருத்தத்தின்படி முதன்முதலாக - அக்டோபர் 10, 1973இல் அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் இசுபிரோ அக்நியூவின் பதவி விலகலை அடுத்து - துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். எனவே அமெரிக்க வரலாற்றிலேயே தேர்தலில் வெற்றிபெறாமலே துணைக் குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் இப்பதவிகளை வகித்த முதலாவதும் இன்றுவரை ஒரே நபருமாக இவர் உள்ளார்.[1] போர்டு 13 முறை மிச்சிகனின் ஐந்தாம் மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; இதில் எட்டுமுறை கீழவை சிறுபான்மைத் தலைவராக இருந்துள்ளார்.

பனிப்போரின் இறுதியில் அமைதியை நோக்கிய நகர்வாக எல்சிங்கி உடன்பாடுகளில் அமெரிக்க குடியரசுத் தலைவராக ஃபோர்டு கையொப்பமிட்டார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று ஒன்பது மாதங்களிலேயே தெற்கு வியட்நாமை வடக்கு வியட்நாம் கைப்பற்றியதை அடுத்து வியட்நாமில் அமெரிக்க ஈடுபாடு குறைந்து போர் முடிவுக்கு வந்தது. இவரது பணிக்காலத்தில் உள்நாட்டில் பொருளியல்நிலை பெரும் பொருளியல் வீழ்ச்சியை அடுத்து விலைவாசி ஏற்றம், பொருளியல் பின்னடைவைக் கண்டது.[2] முந்தைய குடியரசுத் தலைவர் ரிச்சர்டு நிக்சனுக்கு வாட்டர்கேட் முறைகேட்டில் அவரது பங்கிற்காக போர்டு மன்னிப்பளித்தது மிகவும் விமர்சிக்கப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டுறவுகளில் நாடாளுமன்றத்தின் பங்கு கூடியிருந்தது; குடியரசுத் தலைவரின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.[3] 1976இல் நடைபெற்ற தமது கட்சியின் குடியரசுத் தலைவர் துவக்கநிலை தேர்தல்களில், கலிபோர்னியா ஆளுநராக இருந்த ரானல்டு ரீகனை வெற்றி கண்டு குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் 1976ஆம் ஆண்டு நவம்பர் 2இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர், முன்னாள் சியார்ச்சியா ஆளுநர் ஜிம்மி கார்ட்டரிடம் தோற்றார்.

தமது ஆட்சிக்காலத்துக்குப் பிறகும் குடியரசுக் கட்சியில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார். உடல்நிலை மோசமானபிறகு திசம்பர் 26, 2006இல் தமது இல்லத்தில் மரணமடைந்தார். 93 ஆண்டுகளும் 165 நாட்களும் வாழ்ந்திருந்த போர்டு மிகக் கூடுதலாக உயிர் வாழ்ந்திருந்த குடியரசுத் தலைவராகவும் 895 நாட்களே பதவியில் இருந்தமையால் பதவிக்காலத்தில் இறக்காதிருந்த குடியரசுத் தலைவர்களில் மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவராகவும் விளங்குகின்றார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரால்ட்_ஃபோர்ட்&oldid=3581292" இருந்து மீள்விக்கப்பட்டது