ஜேம்ஸ் மன்ரோ
ஜேம்ஸ் மன்ரோ | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 5 வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1817 – மார்ச் 4, 1825 | |
Vice President | டேனியல் டாம்ப்கின்ஸ் |
முன்னையவர் | ஜேம்ஸ் மாடிசன் |
பின்னவர் | ஜான் குவின்சி ஆடம்ஸ் |
7 ஆவது நாட்டுச் செயலாளர் | |
பதவியில் ஏப்ரல் 2, 1811 – செப்டம்பர் 30, 1814 பெப்ரவரி 28, 1815 – மார்ச் 3, 1817 | |
குடியரசுத் தலைவர் | ஜேம்ஸ் மாடிசன் |
முன்னையவர் | ராபர்ட் ஸ்மித் |
பின்னவர் | ஜான் குவின்சி ஆடம்ஸ் |
8 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் போர்க்காலச் செயலாளர் | |
பதவியில் செப்டம்பர் 27, 1814 – மார்ச் 2, 1815 | |
குடியரசுத் தலைவர் | ஜேம்ஸ் மாடிசன் |
முன்னையவர் | ஜான் ஆர்ம்ஸ்ட்ராங், ஜூனியர் |
பின்னவர் | வில்லியம் கிராஃவோர்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 28, 1758 வெஸ்ட்மோர்லாண்டு, வர்ஜீனியா, வர்ஜீனியா |
இறப்பு | ஜூலை 4, 1831, அகவை 73 நியூயார்க் நகரம் |
தேசியம் | அமெரிக்கன் |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக்-ரிப்பளிக்கன் |
துணைவர் | எலிசபெத் கோர்ட்ரைட் மன்ரோ |
கையெழுத்து | |
ஜேம்ஸ் மன்ரோ (James Monroe) (ஏப்ரல் 28, 1758 – ஜூலை 4, 1831) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் (1817-1825) ஆவார். இவரோடு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்கா நடுநிலையாக இருக்க பெரிதும் உழைத்தார். 1812 ஆம் ஆண்டுப் போருக்கு இவர் தம் ஒப்புதல் அளித்து வலுசேர்த்தார். ஜேம்ஸ் மாடிசனுக்குக் கீழ் இவர் போர்க்காலத்துச் செயலாளராகவும் நாட்டுச் செயலாலராகவும் பணி புரிந்தார். இவர் காலத்தில் 1819ல் ஃவிளாரிடாவை ஐக்கிய அமெரிக்கா சேர்த்துக்கொண்டது. 1820ல் மிசௌரி மாநிலத்தை அடிமைமுறை ஏற்புடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இடங்களை ஐரோப்பாவின் வல்லரசுகள் குடியாட்சிகளாக்கும் முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பையும், ஐரோப்பிய வல்லரசுகளின் சண்டைகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கு கொள்வதில்லை என்றும் இவர் 1823ல் ஒரு கொள்கையை அறிவித்தார் இக் கொள்கைக்கு மன்ரோ கொள்கை என்று பெயர். வெளிநாட்டு உறவுக் கொள்கைகளில் இது ஒரு திருப்புமுனையான கொள்கை.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Unger 2009, ப. 9–12
- ↑ Ammon 1971, ப. 577.
- ↑ Unger 2009, ப. 12–19