தாமஸ் ஜெஃவ்வர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமஸ் ஜெஃவ்வர்சன்
T Jefferson by Charles Willson Peale 1791 2.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 3ஆவது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1801 – மார்ச் 4, 1809
துணை குடியரசுத் தலைவர் ஏரன் பர் (1801-1805),
ஜார்ஜ் கிளிண்டன் (1805-1809)
முன்னவர் ஜான் ஆடம்ஸ்
பின்வந்தவர் ஜேம்ஸ் மாடிசன்
2 ஆவதுகுடியரசுத் துணைத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801
குடியரசுத் தலைவர் ஜான் ஆடம்ஸ்
முன்னவர் ஜான் ஆடம்ஸ்
பின்வந்தவர் ஏரன் பர்
1st United States Secretary of State
பதவியில்
செப்டம்பர் 26, 1789 – டிசம்பர் 31, 1793
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன்
முன்னவர் யாரும் இல்லை
பின்வந்தவர் எட்மண்ட் ராண்டால்ஃவ்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 13, 1743
ஷாடுவெல், வர்ஜீனியா
இறப்பு ஜூலை 4, 1826, அகவை 83
சார்லட்வில், வர்ஜீனியா
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி டெமாக்ரிடிக்-ரிபப்ளிக்கன் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மார்த்தா வேய்ல்ஸ் ஸ்கெல்ட்டன் ஜெஃவ்வர்சன்
சமயம் எந்த மதச் சார்பும் இல்லை (யூனிட்டேரியன் அல்லது தேயிஸ்ட் கொள்கை உடையவராக இருக்கலாம்)

[1]

கையொப்பம்

தாமஸ் ஜெஃவ்வர்சன் (தோமஸ் ஜெபர்சன், Thomas Jefferson) (ஏப்ரல் 13, 1743- ஜூலை 4, 1826 அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1776ன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின் முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூயிசியானா என்னும் பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_ஜெஃவ்வர்சன்&oldid=2220320" இருந்து மீள்விக்கப்பட்டது