லூசியானா வாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் ஜெஃவ்வர்சன் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவானது பிரான்ஸிடம் இருந்து 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய லூசியானா நிலம். லூசியானா நிலமானது பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. கிழக்கே இளஞ்சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள மாநிலங்கள்தான் அன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா. சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிகள் ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்குக் கீழ் இருந்த பகுதிகளும், யாரும் உரிமை கோராப்படா பகுதிகளும் ஆகும்

லூசியானா நிலம் வாங்கல் என்பது 1803 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூசியானா என்னும் நிலப்பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியதைக் குறிக்கும். இது தாமஸ் ஜெஃவ்வர்சன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்றது. இந்த லூசியானா என்னும் நிலப் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிகோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இந் நிலப்பகுதியானது இன்று உள்ள ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒருபகுதிக்கும் அதிகமானதாகும் (21.8% ).

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசியானா_வாங்கல்&oldid=3845410" இலிருந்து மீள்விக்கப்பட்டது