உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சமின் பிராங்கிளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் பிராங்கிளின்
Benjamin Franklin
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு100px
(1706-01-17)சனவரி 17, 1706
பொஸ்டன், மசாசுசெட்ஸ்
இறப்புஏப்ரல் 17, 1790(1790-04-17) (அகவை 84)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
இளைப்பாறுமிடம்100px
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிஎதுவுமில்லை
உயரம்220px
துணைவர்டெபோரா றீட்
பெற்றோர்
 • 100px
தொழில்அறிவியலாளர்
எழுத்தாளர்
அரசியல்வாதி
கையெழுத்து

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.[1] அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.[2]

இளமை[தொகு]

பாஸ்டன் நகரில் அமைந்துள்ள பிராங்கிளின் பிறந்த வீட்டின் முந்தைய தோற்றம்

1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் பிராங்கிளின்.[3]}} மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தயாரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். "[4] பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்

எழுத்தும் அச்சுத்தொழிலும்[தொகு]

பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.[5] பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.[6]

இதழியலாளர்[தொகு]

1720 ஆம் ஆண்டு 'பென்சில்வேனியா கெசட்' {Pennsylvania Gazette} என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து 'புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக்'(Poor Richard's Almanack) என்ற இதழைத் தொடங்கினார்.[5] மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.[7]

கண்டுபிடிப்பாளர்[தொகு]

அறிவியல்[தொகு]

அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில் கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார்.[8][9] கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதை பட்டம் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.[10][11] மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.[12] முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (bifocal lens) பிராங்கினின் கண்டுபிடிப்பாகும்.[1] தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை.[13] மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம்."[14]

பிற துறைகள்[தொகு]

அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் காகிதப் பணத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார்.[15][16] சந்தா முறையில் (subscription) நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தார்.[17] பிலடெல்பியாவின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார்.[18][19]

1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார்.[20][21] அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது.[22][23] இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் பிராங்கிளின்.

அரசியல்[தொகு]

பிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு."[24] அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார்.[25] இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் அரசியலறிவைப் பயன்படுத்தி பிரான்சின் உதவியைப் பெற்றார்.[26] அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த பிரான்சும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது; அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.[27]

சிறப்பு[தொகு]

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படம் இடம்பெற்றிருந்தது.

மறைவு[தொகு]

பிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.[28][29]

பொன்மொழி[தொகு]

பெஞ்சமின் பிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Inventor". The Franklin Institute. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
 2. மாணவன் இணையதளம்
 3. Engber, Daniel (2006). What's Benjamin Franklin's Birthday?. Retrieved June 17, 2009.
 4. Franklin, Benjamin (1901) [1771]. "Introduction". Autobiography of Benjamin Franklin. Macmillan's pocket English and American classics. New York: Macmillan. p. vi. பார்க்கப்பட்ட நாள் February 1, 2011. {{cite book}}: Unknown parameter |authormask= ignored (help)
 5. 5.0 5.1 Van Doren, Carl. Benjamin Franklin. (1938). Penguin reprint 1991.
 6. H.W. Brands. The First American: The Life and Times of Benjamin Franklin. Random House Digital; 2010. p. 390.
 7. "William Goddard and the Constitutional Post". Smithsonian National Postal Museum. Archived from the original on 10 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. Benjamin Franklin (1706–1790). Science World, from Eric Weisstein's World of Scientific Biography.
 9. "Conservation of Charge". Archived from the original on 2008-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
 10. Steven Johnson (2008) in The Invention of Air, p.39 notes that Franklin published a description of the kite experiment in The Pennsylvania Gazette without claiming he had performed the experiment himself, a fact he shared with Priestley 15 years later.
 11. Franklin's Kite. Museum of Science, Boston.
 12. Krider, E. Philip. Benjamin Franklin and Lightning Rods. Physics Today. January 2006. பரணிடப்பட்டது 2006-01-10 at the வந்தவழி இயந்திரம்
 13. Franklin, Benjamin. "The Pennsylvania Gazette". FranklinPapers.org பரணிடப்பட்டது 2010-04-05 at the வந்தவழி இயந்திரம், October 23, 1729
 14. Benjamin Franklin. "Part three". The Autobiography of Benjamin Franklin.
 15. John Kenneth Galbraith. (1975). Money: Where It Came, Whence It Went pp. 54–54. Houghton Mifflin Company.
 16. "The Writings of Benjamin Franklin, Volume III: London, 1757–1775 – On the Price of Corn, and Management of the Poor". Historycarper.com. Archived from the original on 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-11.
 17. "A Quick Biography of Benjamin Franklin". USHistory.org. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
 18. Walter Isaacson. Benjamin Franklin: an American life pp. 206–9, 301
 19. calmx (June 16, 2010). "The New York Times Company/About.com". Inventors.about.com. பார்க்கப்பட்ட நாள் June 20, 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
 20. Van Horne, John C. "The History and Collections of the Library Company of Philadelphia," The Magazine Antiques, v. 170. no. 2: 58–65 (1971).
 21. Lemay, J. A. Leo. "Franklin, Benjamin (1706–1790)," Oxford Dictionary of National Biography. ed. H. C. G. Matthew and Brian Harrison (Oxford: OUP, 2004).
 22. "Excerpt from Philadelphia Inquirer article by Clark De Leon". Mathsci.appstate.edu. February 7, 1993. Archived from the original on மே 10, 2010. பார்க்கப்பட்ட நாள் September 21, 2009.
 23. "History of the Benjamin Franklin Institute of Technology". Bfit.edu. Archived from the original on ஜூலை 31, 2008. பார்க்கப்பட்ட நாள் September 21, 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 24. Isaacson 2003, p. 491, 492
 25. Such was the number of portraits, busts and medallions of him in circulation before he left Paris that he would have been recognized from them by any adult citizen in any part of the civilized world. Many of these portraits bore inscriptions, the most famous of which was Turgot's line, "Eripuit fulmen coelo sceptrumque tyrannis." (He snatched the lightning from the skies and the scepter from the tyrants.) —   "Franklin, Benjamin". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
 26. H.W. Brands, The First American: The Life and Times of Benjamin Franklin (2000)
 27. Citizen Ben, Abolitionist. PBS.org.
 28. திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்
 29. Benjamin Franklin: In His Own Words. Library of Congress.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_பிராங்கிளின்&oldid=3926334" இலிருந்து மீள்விக்கப்பட்டது