ஜேம்ஸ் மாடிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் மாடிசன்
JamesMadison.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1809 – மார்ச் 4 1817
துணை குடியரசுத் தலைவர் ஜார்ஜ் கிளிண்ட்டன் (1809-1812),
யாரும் இல்லை (1812-1813),
எல்பிரிட்ஜ் ஜெர்ரி (1813-1814)
யாரும் இல்லை (1814-1817)
முன்னவர் தாமஸ் ஜெஃவ்வர்சன்
பின்வந்தவர் ஜேம்ஸ் மன்ரோ
5 ஆவது நாட்டின் செயலாளர்
பதவியில்
மே 2 1801 – மார்ச் 3 1809
குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன்
முன்னவர் ஜான் மார்ஷல்
பின்வந்தவர் ராபர்ட் ஸ்மித்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச் 16 1751
போர்ட் கான்வே, வர்ஜீனியா
இறப்பு ஜூன் 28 1836, அகவை 85
மாண்ட்பெல்லியெர், வர்ஜீனியா
தேசியம் அமெரிக்கன்
அரசியல் கட்சி டெமாக்ரட்டிக்-ரிப்பப்லிக்கன் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) டாலி டாடு மாடிசன்
சமயம் கிறிஸ்தவம்/எப்பிஸ்க்கோப்பாலியன்
கையொப்பம்

ஜார்ஜ் மாடிசன் (George Madison) (மார்ச் 16, 1751 - ஜூன் 28, 1836) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர். இதனால் இவரை “அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை” என போற்றுவர். இவர் 1788ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787-1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார். அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார். அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை “உரிமைகள் சட்டத்தின் தந்தை” எனப் போற்றுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_மாடிசன்&oldid=2895615" இருந்து மீள்விக்கப்பட்டது