1836
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1836 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1836 MDCCCXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1867 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2589 |
அர்மீனிய நாட்காட்டி | 1285 ԹՎ ՌՄՁԵ |
சீன நாட்காட்டி | 4532-4533 |
எபிரேய நாட்காட்டி | 5595-5596 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1891-1892 1758-1759 4937-4938 |
இரானிய நாட்காட்டி | 1214-1215 |
இசுலாமிய நாட்காட்டி | 1251 – 1252 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 7 (天保7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2086 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4169 |
1836 ((MDCCCXXXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 12 – சார்ல்ஸ் டார்வினுடன் எச்.எம்.எசு. பீகிள் கப்பல் சிட்னிக்கு வந்தது.
- பெப்ரவரி 25 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- மார்ச் 6 – அலாமோ சண்டை முடிவடைந்தது. 182 டெக்சான்கள் 5000 மெக்சிக்கர்களினால் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 17 - டெக்சாசில் அடிமை வர்த்தகம் தடை செய்யப்பட்டது.
- ஏப்ரல் 20 – விஸ்கொன்சின் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
- மே 15 – பிரான்சிசு பெய்லி சூரிய கிரகணம் ஒன்றை அவதானிக்கும் போது தென்பட்ட நிகழ்வு பெய்லியின் முத்துக்கள் (Bailey's beads) என அழைக்கப்பட்டது.
- ஜூன் 15 – ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
- ஜூலை 27 – தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரம் அமைக்கப்பட்டது.
- ஜூலை 30 – முதலாவது ஆங்கிலச் செய்திப்பத்திரிகை ஹவாயில் வெளிவந்தது.
- செப்டம்பர் 11 – தென் அமெரிக்காவில் ரியோகிராண்டென்ஸ் குடியரசு அமைக்கப்பட்டது.
- அக்டோபர் 24 – ஏ. பிலிப்ப்ஸ் என்பவர் தீக்குச்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
- டிசம்பர் 15 – வாசிங்டனில் அமெரிக்க காப்புரிம அலுவலகம் தீக்கிரையானது.
- டிசம்பர் 26 – தெற்கு ஆஸ்திரேலியா என்ற குடியேற்ற நாடு அறிவிக்கப்பட்டது.
- டிசம்பர் 27 - இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 28 – மெக்சிக்கோவின் விடுதலையை ஸ்பெயின் ஏற்றுக் கொண்டது.
- டிசம்பர் 30 – சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் லீமன் அரங்கு தீக்கிரையானதில், 800 பேர் உயிரிழந்தனர்.
தேதிகள் அறியப்படாதவை
[தொகு]- தமிழ் மணி மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் நியுசிலாந்தில் கண்டெடுக்கப்பட்டது.
- இலங்கையின் திருத்தூதரக மறையாட்சி வட்ட ஆளுநராக (Vicar apostolic) தமசீன் ஆயர் வின்சென்ட் டி ரொசாரியோ போப்பாண்டவரால் நியமிக்கப்பட்டார்.
- "த கொழும்பு ஜேர்னல்" எனும் ஆங்கில இதழ் இலங்கையின் ஆள்பதி சேர் ரொபேர்ட் வில்மட் கோட்டலின் நிருவாகத்தில் வெளியிடப்பட்டது.
- ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு முதன் முதலாக இலங்கையில் வரி அறவிடப்பட்டது.
பிறப்புக்கள்
[தொகு]- பெப்ரவரி 18 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், (இ. 1886)
- மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (இ. 1864)
இறப்புக்கள்
[தொகு]- ஜூன் 28 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுத் தலைவர் (பி. 1751)