வெப்ப மண்டலச் சூறாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புயல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இசபெல் வெப்ப மண்டலச் சூறாவளியின் காட்சி. இங்கே அதன் கண், மற்றும் இடியை ஏற்படுத்தும் முகிற்கூட்டங்களைத் தெளிவாக அவதானிக்கலாம்.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து மார்ச் 26, 2004இல் கட்டரீனா என்னும் புயல் உருவாவதை எடுத்தப் படம். புயலின் கண் நடுவே தெரிவதைப் பார்க்கலாம்

குறைந்த வளியமுக்கப் பிரதேசத்தை நடுவில் கொண்ட அயனமண்டலத்தில் ( வெப்பமண்டலத்தில்) உருவாகும் ஒரு சூறாவளி வகையே வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது பொதுவாக வெப்பம் கூடிய அயனமண்டச் சமுத்திரங்களில் தோன்றும். இது இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் முகில்களால் ஆக்கப்பட்டிருக்கும். வெப்பமண்டலம் அல்லது அயனமண்டலம் என்பது இச் சூறாவளி தோன்றும் புவியியற் பிரதேசத்தைக் குறிக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்றுப் பலத்தையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம். ஹரிக்கேன், டைபூன், வெப்ப மண்டலத் தாழமுக்கம் அல்லது சாதாரணமாக சூறாவளி என்றே குறிப்பிடுவதுண்டு. வெப்ப மண்டலச் சூறாவளி பயங்கரமான மழையையும் கடற்பெருக்கையும், பயங்கரமான காற்றையும் உருவாக்கும். கடலை அண்மித்த பிரதேசங்களைப் பொதுவாக இது பாதித்தாலும், சிலவேளைகளில் கடலிலிருந்து தூரத்தில் காணப்படும் பிரதேசங்களையும் தாக்கும்.[1]

இயற்பியல் கட்டமைப்பு[மூலத்தைத் தொகு]

அனைத்து வெப்பமண்டலச் சூறாவளிகளும் ஒரு தாழமுக்கப் பிரதேசத்தைக் கொண்டிருக்கும். இதன் கட்டமைப்பு சிக்கலானது. இதில் 'கண் எனப்படும் மையப் பகுதியைக் கொண்டிருக்கும். (ஒரு பலமான வெப்ப மண்டலச் சூறாவளியின் மையத்தில் முகில்கள் காணப்படாமல் மேலெழும்பும் வளித்திரளே இருக்கும். இது மேலும் பலமாகக் காணப்படும் போது 'கண்' எனப்படும் கட்டமைப்பு உருவாகும். இது வட்டவடிவில் இருப்பதோடு 30–65 km நீளமான ஆரையைக் கொண்டிருக்கும். இம் மையப்பகுதியில் காற்று பலமாக வீசாது; மழையும் பொழியாது. கண்ணைச் சுற்றியுள்ள முகில்களில் பலமான காற்றும் மழையும் பொழியும். விண்வெளியிலிருந்து அவதானிக்கும் போது கண் போலத் தென்படுவதால்).[2]

கண் (மையப் பகுதி)[மூலத்தைத் தொகு]

ஒரு பலமான வெப்ப மண்டலச் சூறாவளியின் மையத்தில் முகில்கள் காணப்படாமல் மேலெழும்பும் வளித்திரளே இருக்கும். இது மேலும் பலமாகக் காணப்படும் போது 'கண்' எனப்படும் கட்டமைப்பு உருவாகும். இது வட்டவடிவில் இருப்பதோடு 30–65 km நீளமான ஆரையைக் கொண்டிருக்கும்[3]. இம் மையப்பகுதியில் காற்று பலமாக வீசாது; மழையும் பொழியாது. கண்ணைச் சுற்றியுள்ள முகில்களில் பலமான காற்றும் மழையும் பொழியும்.[4]

Hurricane profile-ta.svg

வழக்கமாக வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் ஏழு பெரிய இடங்கள்[மூலத்தைத் தொகு]

உலகத்தில் உள்ள ஏழு பெரும் புயல் உண்டாகும் தளங்களாவன:

  • வட அட்லாண்டிக் மாக்கடல்
  • பசிபிக் மாக்கடலின் கிழக்குப் பகுதி
  • பசிபிக் மாக்கடலிலன் மேற்குப் பகுதி
  • பசிபிக் மாக்கடலின் தென் மேற்குப் பகுதி
  • இந்திய மாக்கடலின் தென்மேற்குப் பகுதி,
  • இந்திய மாக்கடலின் தென் கிழக்குப் பகுதி
  • இந்திய மாக்கடலின் வடக்குப் பகுதி.

உலகம் முழுவதற்கும் ஓராண்டுக்கு சுமார் 80 புயற்காற்று வீச்சுகள் நிகழ்கின்றன.

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_மண்டலச்_சூறாவளி&oldid=2302735" இருந்து மீள்விக்கப்பட்டது