உள்ளடக்கத்துக்குச் செல்

பனிப்புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகுரானில் பனிப்புயலால் பாதிக்கப்பட்ட பனிச்சறுக்கு வீரர்கள்.
கனடாவின் ஒன்றாரியோவில் நள்ளிரவில் ஏற்பட்ட ஒரு கடும் பனிப்புயல்.

பனிப்புயல் (Blizzard) என்பது வட மற்றும் தென் துருவங்களிலிருந்து வீசும் புயல்காற்றில் சிதறுண்ட பனிக்கட்டிகளும் கலந்து வரும் ஒரு கடுமையான ஒரு நிகழ்வாகும்.[1] இது வலுவான காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும்[2][3] பொதுவாக குறைந்தது மூன்று அல்லது நான்கு மணிநேரம் கூட இது நிலைத்திருக்கும்.[4]

1963 ஆம் ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்தின் லங்காக்சயர், பர்ரோ-வித்-பர்ரோவுக்கு அருகில் ஏற்பட்ட பனி மூட்டம்

தரைப் பனிப்புயல் என்பது பனிப்பொழிவு இல்லாத வானிலை நிலையாகும். ஆனால் தரையில் உள்ள தளர்வான பனியானது பலத்த காற்றால் தூக்கி வீசப்படுகிறது. பனிப்புயல்கள் அபரிமிதமான அளவைக் கொண்டிருக்கலாம். மேலும், இவை பொதுவாக நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை நீண்டிருக்கும்.

பனிப்புயல் வீசும் பகுதிகள்

[தொகு]

மத்திய கிழக்குக் கனடா, சோவியத் உருசியா, அமெரிக்காவின் மிசிசிப்பி வடிகால்பகுதி ஆகியவை பனிப்புயல் வீசும் பகுதிகளாகும்.

பனிப்புயலின் இயல்புகள்

[தொகு]

பனிப்புயல் சிலசமயம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதுண்டு. பனிப்புயலால் பெருஞ்சேதம் உண்டாகும். இப்புயல் எப்போது எத்திசையில் வீசக்கூடும் என்பதை வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்னதாகவே தெரிந்து அறிவிக்க முடியும். இதனால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடிகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Blizzard definition, Weather Words, Australian Government Bureau of Meteorology". Bom.gov.au. Retrieved 2012-08-18.
  2. "Blizzard at the US National Weather Service glossary". Weather.gov. 2009-06-25. Retrieved 2012-08-18.
  3. "Blizzards". www.ussartf.org. Retrieved 11 May 2018.
  4. Canada, Environment and Climate Change (2010-07-26). "Criteria for public weather alerts". www.canada.ca. Retrieved 2022-03-23.
  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பனிப்புயல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்புயல்&oldid=3870270" இலிருந்து மீள்விக்கப்பட்டது