இட்சாக் ரபீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்சாக் ரபீன்
Yitzhak Rabin
Yitzhak Rabin (1986) cropped.jpg
இஸ்ரேலின் 5வது பிரதமர்
பதவியில்
ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995
முன்னவர் இட்சாக் சமீர்
பின்வந்தவர் சிமோன் பெரெஸ்
பதவியில்
ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977
முன்னவர் கோல்டா மேயர்
பின்வந்தவர் மெனாக்கெம் பெகின்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 1, 1922(1922-03-01)
ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்)
இறப்பு நவம்பர் 4, 1995(1995-11-04) (அகவை 73)
டெல் அவீவ், இஸ்ரேல்
அரசியல் கட்சி கூட்டமைப்பு, தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லியா ரபீன்
பிள்ளைகள் டாலியா
யுவால்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: About this soundיִצְחָק רַבִּין , மார்ச் 1, 1922நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

1993, செப்டம்பர் 13 இல் ஒஸ்லோ அமைதி மாநாட்டில் இட்சாக் ரபீன், பில் கிளிண்டன், யாசர் அரபாத்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Yitzhak Rabin - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. ""Yitzhak Rabin - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 19 சூலை 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சாக்_ரபீன்&oldid=3682019" இருந்து மீள்விக்கப்பட்டது