ரால்ப் பன்ச்
ரால்ப் பன்ச் Ralph Bunche | |
|---|---|
1963 வாசிங்டன் அணிவகுப்பில் ரால்ப் பன்ச் | |
| பிறப்பு | ரால்ப் ஜான்சன் பன்ச் ஆகத்து 7, 1904 டிட்ராயிட், மிச்சிகன், U.S. |
| இறப்பு | திசம்பர் 9, 1971 (அகவை 67) நியூயார்க்கு நகரம், New York, U.S. |
| அறியப்படுவது | இசுரேல், அமைதிக்கான நோபல் பரிசு |
| கையொப்பம் | |
ரால்ப் ஜான்சன் பன்ச் ( Ralph Johnson Bunche ஆகஸ்ட் 7, 1904 - டிசம்பர் 9, 1971) ஓர் அமெரிக்க அரசறிவியலாளர், கல்வியாளர், இராஜதந்திரி ஆவார். இவர் 1940-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இசுரேலில் மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதற்காகக் பெருமைப்படுத்தப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர் ஆவார். ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டார், ஐ.நா. நிதியுதவி செய்த பல அமைதி காக்கும் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 1963 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடியால் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. [1]
பரம்பரை
[தொகு]பன்ச் 1904 இல் மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் பிறந்தார். நகரத்தின் இரண்டாவது பாப்டிஸ்ட் தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். இவரது தந்தை பிரெட் பன்ச் முடிதிருத்தும் தொழிலாளர் ஆவார். இவரது தாயார் ஆலிவ் ஆக்னஸ் (நீ ஜான்சன்) ஒரு இசைக்கலைஞர் ஆவார். [2] சார்லியும் எத்தேல் ஜான்சனும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
தாமஸ் நெல்சன் ஜான்சன் 1875 இல் இல்லினாய்ஸின் ஆல்டனில் உள்ள சர்டில்ஃப் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். செப்டம்பர் 1875 ஆம் ஆண்டில் இவர் தனது மாணவர்களில் ஒருவரான லூசி டெய்லரை மணந்தார். [2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ரால்ப் குழந்தையாக இருந்தபோது, இவரது குடும்பம் ஓகையோவின் டோலிடோவுக்குக் குடிபெயர்ந்தது. அந்தப் பகுதியில் இவரது தந்தை வேலை தேடினார். இவர்களின் தாய்வழி அத்தை எத்தேல் ஜான்சனின் உதவியுடன் இவரது சகோதரி கிரேசு பிறந்த பிறகு 1909 ஆம் ஆண்டில் இவர்கள் டெட்ராய்டுக்குத் திரும்பினர்.[2]
இவரது தாய், மாமாவின் உடல்நலன் காரணமாக, ரால்ப் தனது தாய்வழி பாட்டி லூசி டெய்லர் ஜான்சனுடன் 1915 இல் நியூ மெக்சிகோவின் அல்புகெர்க்கிக்குக் குடிபெயர்ந்தார். இவரது தாயார் 1917 ஆம் ஆண்டில் இறந்தார். இவரது மாமா மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார் . [2] அப்போது பன்சேவுக்கு 13 வயது ஆகும்.
1918 ஆம் ஆண்டில், லூசி டெய்லர் ஜான்சன் இரண்டு பேரக்குழந்தைகளுடன் தென் சவுத் ஏஞ்சலுக்குக் குடியேறினார். [2] [3] [4] ஃப்ரெட் பன்ச் பின்னர் இரண்டாவது திருமனம் செய்து கொண்டார்.
பன்ச் கல்வியில் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். ஜெபர்சன் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது ஒரு பட்டிமன்றப் பேச்சாளராக இருந்தார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் ( யு.சி.எல்.ஏ ) பயின்றார், மேலும் 1927 ஆம் ஆண்டில் தனது வகுப்பின் வாலிடெக்டோரியனாக சுமா கம் லாட் மற்றும் ஃபை பீட்டா கப்பா [5] பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி உதவித் தொகையுடன் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக (1928-1950), ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் தலைவராகப் பன்ச் பணியாற்றினார் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் (1960-1965) தான் பயின்ற கல்விசாலையின் மேற்பார்வையாளர் குழுவின் உறுப்பினராகவும், சர்வதேச கல்வி நிறுவனத்தின் குழுவின் உறுப்பினராகவும், ஓபர்லின் கல்லூரி, லிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ லிங்கன் ஆகியவற்றின் அறங்காவலராகவும் பணியாற்றினார். .
மரியாதைகள்
[தொகு]இவர் 1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இசுரேலில் மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதற்காகப் பெருமைப்படுத்தப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர் ஆவார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Urquhart, Brian (1998). Ralph Bunche: an American life. p. 25. ISBN 978-0-393-31859-3.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Ralph J. Bunche". Gale Cengage Learning. Retrieved 2012-11-15.
- ↑ "Dr. Bunche of U.N., Nobel winner, Dies". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/learning/general/onthisday/bday/0807.html.
- ↑ "Michigan History: Dr. Ralph Bunche—from Detroit to the world stage". The Detroit News இம் மூலத்தில் இருந்து ஜூலை 7, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707182010/http://apps.detnews.com/apps/history/index.php?id=89.
- ↑ "Nobel Laureates Who Are BK Members" (PDF). 2009. Archived from the original on 2015-09-09. Retrieved 2020-01-11.