உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்காகோ பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 41°47′23″N 87°35′59″W / 41.78972°N 87.59972°W / 41.78972; -87.59972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்காகோ பல்கலைக்கழகம்
The University of Chicago (ஆங்கில மொழி)
இலத்தீன்: Universitas Chicaginiensis
குறிக்கோளுரைCrescat scientia; vita excolatur (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Let knowledge grow from more to more; and so be human life enriched."[1]
வகைதனியார் ஆய்வு பல்கலைக்கழகம்
உருவாக்கம்1890, 1856; 133 ஆண்டுகள் முன்னர் (1890, 1856)[2][3]
நிறுவுனர்ஜான் டி. ராக்பெல்லர்
நிதிக் கொடை$10.3 பில்லியன் (2022)[4]
தரநிர்ணயம்HLC
தலைவர்பால் அலிவிசாடோஸ்
Provostகா யீ கிறிஸ்டினா லீ
கல்வி பணியாளர்
2,859[5]
நிருவாகப் பணியாளர்
15,949 (சிக்காகோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஊழியர்கள் உட்பட)[5]
மாணவர்கள்18,452
பட்ட மாணவர்கள்7,559[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்10,893[2]
அமைவிடம், ,
41°47′23″N 87°35′59″W / 41.78972°N 87.59972°W / 41.78972; -87.59972
வளாகம்பெரிய நகரம்,[6] 217 ஏக்கர்கள் (87.8 ha) (முக்கிய வளாகம்)[2]
வாரன் வூட்ஸ் சூழலியல் கள நிலையம், வாரன் வூட்ஸ் மாநில பூங்கா, 42 ஏக்கர்கள் (17.0 ha)[7]
மற்ற வளாகங்கள்
நிறங்கள்     மெரூன்[8]
சுருக்கப் பெயர்மரூன்ஸ்
நற்பேறு சின்னம்ஃபில் தா பீனிக்ஸ்
Sporting affiliations
NCAA Division IIIUAA
இணையதளம்www.uchicago.edu

சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும்.

நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்குப் படித்தவர்கள் ஆவார்.[9] மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர்.[10]

வரலாறு

[தொகு]
தொடக்க கால ஆண்டு விழா

நிறுவல்

[தொகு]

இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இருபாலரும் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.[11] அமெரிக்க பாப்டிச தேவாலயத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஜான் டி. ராக்பெல்லர் இதற்குப் பண உதவி வழங்கினார். முதன்முறையாக, 1890-ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ப்பர் இதன் தலைவரானார். முதல் வகுப்புகள் 1892-ஆம் ஆண்டு நடந்தன. .[12] தனி நிறுவனமாகத் தொடங்கினர். இதே பெயரில் முன்னர் செயல்பட்ட பல்கலைக்கழகம், நிதி நெருக்கடியால் 1886-இல் மூடப் பட்டதால், இது தொடங்கப்பட்டது, பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி 1898-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது,[13]. பல்கலைக்கழக சட்டப் பள்ளி 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. [14] பின்னர், ஆசிய ஆய்வியல் நிறுவனம் தொடங்கப்பட்டு தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன,[15]

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் இலவசமாகவே இங்குப் படிக்க அனுமதிக்கப்பட்டனர். இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நூல்களையும், ஆய்வுக் கருவிகளையும் வழங்கியது,

1920–1980

[தொகு]

1929-ஆம் ஆண்டு, பல்கலையின் ஐந்தாவது தலைவரான ராபர்ட் மேனார்டு ஹட்சின்ஸ், கல்விக்கு முக்கியத்துவம் தர எண்ணிப் பல்கலைக்கழக கால்பந்து குழுவை நீக்கினார்.[16] வடமேற்குப் பல்கலைக்கழகத்தையும், சிக்காகோ பல்கலைக்கழகத்தையும் இணைக்கத் திட்டமிட்டார்.[17] இவரது காலத்தில், பல்கலைக்கழக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. மருத்துவத் துறை மாணவர்கள் சேரத் தொடங்கினர்.[18]

அணுக்கருத் தாக்கத்தைக் கண்டுபிடித்தவர்கள். என்ரிக்கோ பெர்மி முதல் வரிசையில்

ராக்ஃபெல்லர் அறக்கட்டளை வழங்கிய பணத்தால், பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது கல்லூரி நிர்வாகம்.[16] இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தால் மன்காட்டன் திட்டம் செயற்படுத்தப்பட்டது.[19] புளூட்டோனியத்தை முதன்முறையாக இங்குதான் பிரித்தனர். செயற்கையான, அணுப்பிளவை என்ரிக்கோ பெர்மி கண்டுபிடித்தார்.[19][20]

1978-ஆம் ஆண்டில், ஹன்னா ஹோல்போர்ன் கிரே, யேல் பல்கலைக்கழகத்தின் தலைவராய் இருந்தவர், பின்னர் இங்குத் தலைவராக ஏற்கப்பட்டார். பெண்ணான இவர், 15 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார்..[21]

1990–2010

[தொகு]

1999 ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான ஹூகோ சோன்னென்ஷென், மாணவர்களின் சுமையைக் குறைக்க எண்ணிப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை 21-இல் இருந்து 15-ஆக குறைக்கப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ், தி எக்கனாமிஸ்ட் உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகைகள் இதைச் செய்தியாக வெளியிட்டன. பிரச்சனை எழவே, 2000-இல் தன் பதவியில் இருந்து விலகினார்.[22]. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கியது. 2009-ஆம் ஆண்டில், மேக்ஸ் பலேவ்சுகி வசிப்பிடக் கட்டடம் உருவாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், 10 மாடிக்கட்டடமாக உயிர்மருத்துவத் துறை மையம் கட்டப்பட்டது.[23]

வளாகம்

[தொகு]

முதன்மை வளாகம் 211 ஏக்கர்கள் (85.4 ha) பரப்பளவில் சிக்காகோ நகரில் உள்ளது. 1893-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி, பல்கலையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது. தொடக்ககால கட்டடங்கள் ஆறு உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன, இங்குள்ள ஹட்சிசன் அறை, ஆஃக்சுபோர்டு நகர தேவாலயத்தை ஒத்திருக்கும். சிக்காகோ பைல்-1 அமைந்துள்ள இடம், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.[24] பிராங்க் லாய்டு ரைட் கட்டிய ராபி ஹவுஸ் கட்டடமும் தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளென் சீபோர்க், தன் 405 அறையில், புளோட்டினியத்தை இங்குதான் பிரித்தார்.[25]

தொலைதூர வளாகங்கள்

[தொகு]

இந்தப் பல்கலைக்கழகம் தொலைதூரங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது. இதன் வணிகப் பள்ளிக்குச் சிங்கப்பூரிலும், லண்டனிலும் கிளைகள் உள்ளன. பாரிசு நகரில் ஒரு வளாகம், செய்ன் ஆறு அருகில் உள்ளது. பெய்ஜிங் நகரிலும் இதன் வளாகம் 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது,

நிர்வாகம்

[தொகு]

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு உள்ளது. பல்கலைக்கழகத் தலைவர் உட்பட ஐம்பது பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். பல்கலைக்குத் தேவையான நிதியைச் சேகரிப்பதும், திட்டங்களை வகுப்பதும், இதன் பொறுப்பு.[26]

நூலகம்

[தொகு]

இங்கு ஆறு நூலகங்கள் உள்ளன. மொத்தம் 8.5  மில்லியன் நூல்கள் உள்ளன. அமெரிக்காவின் முன்னணி நூலகங்களில் இதுவும் ஒன்று. தத்துவம், வரலாறு, வணிகம், மருத்துவம் எனப் பல துறைச் சார்ந்த நூல்களும் இவற்றுள் அடங்கும்.

பழைய மாணவர்கள்

[தொகு]

2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பல்கலைக்கழகத்திற்கு 133,155 பழைய மாணவர்கள் உள்ளனர்..[27] இவர்களில் பராக் ஒபாமா குறிப்பிடத்தக்கவர். மேலும், இங்குப் படித்தவர்கள். உலக வங்கி, கனடிய அரசு, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் பணிபுரிகின்றனர்.

நேட் சில்வர், கர்ட் வானெகெட், கார்ல் சேகன், மில்ட்டன் ஃப்ரீட்மன், யூஜின் ஃபாமா, எட்வின் ஹபிள், லாரி எலிசன் ஆகியோரும் இங்குக் கற்றனர்.

தடகளம்

[தொகு]

இங்குப் பத்து ஆண் குழுக்களும், ஒன்பது மகளிர் குழுக்களும் இயங்குகின்றன.[28]. சிக்காகோ மரூன்ஸ் என்பது இந்த விளையாட்டுக் குழுக்களின் ஒட்டுமொத்த பெயர். என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய தடகளப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பர்.

மாணவர் வாழ்க்கை

[தொகு]

இங்குள்ள மாணவர்கள் ஏறத்தாழ 400 அமைப்புகளை நடத்துகின்றனர். இவற்றில் சமயம், பண்பாடு, விளையாட்டு, ஆர்வக் குழுக்கள் ஆகியன அடங்கும். மாணவர்களே பதிப்பிக்கும் செய்தித்தாள், திரைப்படக் குழு, பல்கலைக்கழக வானொலி உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன.

பிற

[தொகு]

இங்குத் தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[29]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History and Traditions". The University of Chicago. 2023. பார்க்கப்பட்ட நாள் January 8, 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 "About the University". The University of Chicago. 2019. பார்க்கப்பட்ட நாள் November 24, 2019.
  3. Jordan, Caine; Mount, Guy Emerson; Parker, Kai Perry (2018). "A Disgrace to All Slave Holders". The Journal of African American History 103 (1–2): 163–178. doi:10.1086/696362. https://www.journals.uchicago.edu/doi/abs/10.1086/696362?journalCode=jaah. பார்த்த நாள்: December 4, 2021. 
  4. As of June 30, 2021. "University of Chicago endowment ended FY22 at $10.3 billion | University of Chicago News". November 18, 2022.
  5. 5.0 5.1 "Faculty and Staff, at a glance". University of Chicago Data. University of Chicago. Archived from the original on March 31, 2019. பார்க்கப்பட்ட நாள் March 13, 2019.
  6. "College Navigator - University of Chicago". nces.ed.gov.
  7. "University of Chicago opens groundbreaking sustainable field station". The University of Chicago. Archived from the original on March 14, 2016. பார்க்கப்பட்ட நாள் July 8, 2015.
  8. The University of Chicago Identity Guidelines. https://news.uchicago.edu/sites/default/files/attachments/_uchicago.identity.guidelines.pdf. பார்த்த நாள்: September 18, 2018. 
  9. "About the University of Chicago". University of Chicago.
  10. Fields Medal | The University of Chicago பரணிடப்பட்டது 2012-05-15 at the வந்தவழி இயந்திரம். Uchicago.edu. Retrieved on 2013-08-15.
  11. Goodspeed, Thomas Wakefield (1916). A History of the University of Chicago. Chicago: The University of Chicago Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-30367-5.
  12. "History". University of Chicago. Archived from the original on ஏப்ரல் 16, 2010. பார்க்கப்பட்ட நாள் May 26, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  13. "Chicago Booth History". University of Chicago Booth School of Business. Archived from the original on ஜூன் 2, 2009. பார்க்கப்பட்ட நாள் September 8, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  14. "History of the Law School". University of Chicago Law School. பார்க்கப்பட்ட நாள் September 8, 2009. {{cite web}}: line feed character in |publisher= at position 15 (help)
  15. "A Brief History of the Oriental Institute". The Oriental Institute. Archived from the original on 2009-03-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02. Since its establishment in 1919, The Oriental Institute has sponsored archaeological and survey expeditions in every country of the Near East. {{cite web}}: line feed character in |title= at position 20 (help)
  16. 16.0 16.1 "History of the Office". The University of Chicago Office of the President. November 6, 2008. Archived from the original on அக்டோபர் 28, 2009. பார்க்கப்பட்ட நாள் September 14, 2009. {{cite web}}: Unknown parameter |= ignored (help); line feed character in |publisher= at position 5 (help)
  17. "The University of Chicago proposal". Northwestern university. Archived from the original on மே 27, 2010. பார்க்கப்பட்ட நாள் September 8, 2009.
  18. "A Brief History of the Medical Center". The University of Chicago Medical Center. Archived from the original on டிசம்பர் 2, 2009. பார்க்கப்பட்ட நாள் September 14, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. 19.0 19.1 "University of Chicago Met Lab". Atomic Heritage Foundation. Archived from the original on ஜூன் 12, 2011. பார்க்கப்பட்ட நாள் July 31, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help); line feed character in |title= at position 15 (help)
  20. "The First Reactor". 1982. Archived from [http://www.osti.gov/cgi- bin/rd_accomplishments/display_biblio.cgi?id=ACC0044&numPages=51&fp=N the original] on ஜூலை 14, 2003. பார்க்கப்பட்ட நாள் July 15, 2009. On December 2, 1942, in a racquets court underneath the West Stands of Stagg Field at the University of Chicago, a team of scientists led by Enrico Fermi created man's first controlled, self-sustaining nuclear chain reaction. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |archive-date= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help); line feed character in |url= at position 25 (help)
  21. University of Chicago News Office(March 9, 2006). "Hanna Holborn Gray (1978–1993)". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: September 14, 2009.
  22. Beam, Alex (2008). A Great Idea at the Time. Public Affairs. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58648-487-3.
  23. University of Chicago News Office. "$25 million gift from Jules and Gwen Knapp will help build 10-story medical research facility at the University of Chicago". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 11, 2006.
  24. "Site of the First Self-Sustaining Nuclear Reaction". National Historic Landmarks Program. Archived from the original on ஏப்ரல் 5, 2015. பார்க்கப்பட்ட நாள் September 12, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  25. "Room 405, George Herbert Jones Laboratory". National Historic Landmarks Program. Archived from the original on பிப்ரவரி 8, 2008. பார்க்கப்பட்ட நாள் September 12, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  26. "Board of Trustees". The University of Chicago. பார்க்கப்பட்ட நாள் August 15, 2009. {{cite web}}: line feed character in |publisher= at position 5 (help)
  27. Yoe, Mary Ruth (February 2004). "Everybody's a critic". University of Chicago Magazine 96 (3). http://magazine.uchicago.edu/0402/features/index.shtml. 
  28. "University of Chicago Athletics: Quick Facts" (PDF). 2007. Archived from the original (PDF) on ஜூன் 16, 2009. பார்க்கப்பட்ட நாள் July 30, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  29. "தமிழ்மொழி வகுப்புகள்". Archived from the original on 2011-03-20. பார்க்கப்பட்ட நாள் 2011-08-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்காகோ_பல்கலைக்கழகம்&oldid=3929777" இலிருந்து மீள்விக்கப்பட்டது