செய்ன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செய்ன் ஆறு
The Seine as seen from the Eiffel Tower, June 2002.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஆங்கிலக் கால்வாய்
செய்ன் குடா (லே ஆவர்)
49°26′5″N 0°7′3″E / 49.43472°N 0.11750°E / 49.43472; 0.11750 (English Channel-Seine)ஆள்கூறுகள்: 49°26′5″N 0°7′3″E / 49.43472°N 0.11750°E / 49.43472; 0.11750 (English Channel-Seine)
நீளம்776 கிமீ

செய்ன் ஆறு (Seine river) (/sn/ SAYN-'பிரெஞ்சு மொழி: La Seinepronounced [la sɛːn]பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. இது பிரான்சின் உள்நாட்டு நீர்வழிகளில் முதன்மையானது. கிழக்கு பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரருகே உருவாகி 776 கிமீ பாய்ந்து லே ஆவர் நகரருகே ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. கடலில் கலக்கும் இடத்திலிருந்து 120 கிமீ உட்பகுதிக்கு கடலில் செல்லும் கப்பல்கள் செல்லத்தக்க அகலமும் ஆழமும் செய்ன் ஆற்றுக்கு உள்ளது. அதன் நீளத்தின் அறுபது சதவிகிதத்துக்கு மேல் வர்த்தக ஆற்றுப்படகுகள் செல்ல உகந்ததாக உள்ளது. பொழுதுபோக்கு படகுகள் பாரீசின் கோச் ஆற்றிலும் , துராத் ஆற்றிலும் நகர்வலம் வருகின்றன.

முப்பத்தியேழு பாலங்கள் பாரிசுக்கு உள்ளேயும், பன்னிரெண்டுக்கும் மேல் நகரத்திற்கு வெளியேயும் இந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. போண்ட் அலெக்சாந்தர் மற்றும் போண்ட் நெவ்ப் ஆகியவை 1607 இல் கட்டப்பட்டவை.

ஆற்றின் ஊற்றுக்கண்[தொகு]

செய்ன் ஆறு உருவாகுமிடம்

செய்ன் ஆற்றின் ஊற்றுக்கண், டிசோன் நகரின் வடகிழக்கில் 30 கி.மீ. தொலைவில் சோர்சு சேய்ன் எனும் கொம்யூனில் அமைந்துள்ளது. இங்கு கெல்லோ-உரோமன் கோவிலின் எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் ' செய்ன் பெண் தெய்வத்தின் ' சிலை கண்டெடுக்கப்பட்டு டிசோன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் வழி[தொகு]

இன்று செய்ன் ஆற்றின் சராசரி ஆழம் 9.5 மீட்டர்கள் (31 அடி) ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செய்ன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்ன்_ஆறு&oldid=2399103" இருந்து மீள்விக்கப்பட்டது