ஆங்கிலேயக் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆங்கிலக் கால்வாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலேயக் கால்வாய்
EnglishChannel.jpg
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
முதன்மை வரத்துஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு,
சொம்மே ஆறு
வடிநில நாடுகள்ஐக்கிய இராச்சியம், பிரான்சு
அதிகபட்ச ஆழம்174 m (571 ft)
உவர்ப்புத் தன்மை3.4 to 3.5%
குடியேற்றங்கள்பிளைமவுத், போர்ட்ஸ்மவுத்

ஆங்கிலேயக் கால்வாய் (English Channel) அல்லது ஆங்கிலக் கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1]

புவியியல்[தொகு]

ஆங்கிலக் கால்வாயின் வரைபடம்

இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.

கால்வாய் சுரங்கம்[தொகு]

ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "English Channel". The Columbia Encyclopedia, 2004.

50°11′01″N 0°31′52″W / 50.18361°N 0.53111°W / 50.18361; -0.53111

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேயக்_கால்வாய்&oldid=3508372" இருந்து மீள்விக்கப்பட்டது