எட்வின் ஹபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எட்வின் ஹபிள்

எட்வின் பாவெல் ஹபிள் எனும் முழுப்பெயர் கொண்ட எட்வின் ஹபிள் (Edwin Hubble, நவம்பர் 20, 1889 – செப்டெம்பர் 28, 1953) ஒரு புகழ் பெற்ற வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் மிசூரியில் உள்ள மாஷ்ஃபீல்ட் என்னுமிடத்தில் ஒரு காப்புறுதித் துறை அலுவலராக இருந்தார். 1898 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் இல்லினோய்சில் உள்ள வீட்டனுக்கு இடம் பெயர்ந்தது. எட்வின் ஹபிள் இளமைக் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இவர் கல்வித் திறமையிலும் பார்க்க விளையாட்டுத் திறமைக்காகவே பெயர் பெற்றிருந்தார்.

இவர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில், கணிதம், வானியல் என்பவற்றைக் கற்று 1910 இல் இளநிலைப் பட்டம் பெற்றார். ஒக்ஸ்ஃபோட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றபின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் இவர் இந்தியானாவின் நியூ அல்பனியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், கூடைப்பந்துப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அத்துடன் கெண்ட்டகியில் சட்டத் தொழிலும் செய்து வந்தார். முதலாம் உலகப் போரில் இராணுவ சேவையில் சேர்ந்த இவர் விரைவில் மேஜர் தரத்துக்கு உயர்ந்தார். இப்பணியின் பின்னர் வானியல் துறைக்குத் திரும்பிய இவர், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் யேர்க்ஸ் வானாய்வு நிலையத்தில் சேர்ந்தார். அங்கே 1917 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து எட்வின் ஹபிள் நினைவாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியை ஏப்ரல் 24, 1990இல் அனுப்பியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஹபிள் விண் தொலைநோக்கி இயங்கி 25 ஆண்டுகள் – படத்தொகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_ஹபிள்&oldid=2194916" இருந்து மீள்விக்கப்பட்டது