கர்ட் வானெகெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ட் வானெகட்

2004ல் வானெகட்
பிறப்பு கர்ட் வானெகெட், இளையவர்
நவம்பர் 11, 1922(1922-11-11)
இண்டியானாபொலிஸ், இண்டியானா, அமெரிக்கா
இறப்பு ஏப்ரல் 11, 2007(2007-04-11) (அகவை 84)
நியூ யார்க் நகரம்,
அமெரிக்கா
தொழில் எழுத்தாளர்
நாடு அமெரிக்கர்
எழுதிய காலம் 1949–2005
இலக்கிய வகை அங்கதம்
இருண்ட நகைச்சுவை
அறிபுனை
http://vonnegut.com/

கர்ட் வானெகட் (Kurt Vonnegut; நவம்பர் 11, 1922 – ஏப்ரல் 11, 2007) 20ம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க எழுத்தாளர். இவரது படைப்புகளில் அங்கதம், இருண்ட நகைச்சுவை, அறிபுனை போன்ற பாணிகள் கலந்து காணப்படுகின்றன. மனித நேய நம்பிக்கை கொண்டிருந்த வானேகட், அமெரிக்க மனிதநேயர்களின் அமைப்பின் கெளரவத் தலைவராகவும் பணியாற்றினார்.

போர்க்கைதி[தொகு]

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் பிறந்த வானேகட், கார்நெல் பல்கலைக்கழகத்தில் படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அமெரிக்க தரைப்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். 1944ல் பல்ஜ் சண்டையின் போது நாசி ஜெர்மனியின் படையினரால் கைது செய்யப்பட்டார். வானேகட் டிரெஸ்டென் நகரில் போர்க்கைதியாக இருந்த போது நேசநாட்டு வான்படைகள் அந்நகரின் மீது எரிகுண்டுகளை வீசி பெரும் தாக்குதல் நடத்தின. பெப்ரவரி 1945ல் நடந்த இந்த குண்டுவீச்சில், டிரெஸ்டன் நகரின் பெரும்பகுதி அழிந்தது, 25,000 மக்கள் உயிரிழந்தனர். வானெகட்டும் அவருடை சக கைதிகளும் நிலத்தடியில் அமைந்திருந்த ஒரு இறைச்சி கூடத்தில் (slaughterhouse) அடைக்கப்பட்டிருந்ததால், உயிர் தப்பினர். இந்த குண்டுவீச்சினால் நிகழ்ந்த பெரும் உயிர்ச்சேதம் வானெகெட்டை வெகுவாகப் பாதித்தது. அவரது பிற்கால படைப்புகளில் அவரது டிரெஸ்டன் நகர அனுபவங்களின் தாக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

எழுத்தாளர் பணி[தொகு]

போர் முடிந்து தாயகம் திரும்பிய வானெகட், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பத்திரிக்கை நிருபரானார். 1950ல் அவரது முதல் சிறுகதை வெளியானது. 1950களிலும், 60களிலும் மேலும் சில புத்தகங்கள் வெளியாயின. 1965ல் அவரது ஸ்லாட்டர்ஹவுஸ் ஃபைவ் (Slaugterhouse Five) வெளியாகி பெரும் வெற்றி கண்டது. அடுத்த முப்பதாண்டுகளில் பல புதினங்கள், சிறுகதைகள், குறுபுதினங்களை எழுதினார். கேட்ஸ் கிரேடில் (Cat's Cradle), பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் (Breakfast of Champions), டெட் ஐ டிக் (Deadeye Dick) ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். பொதுவாக சோஷியலிய மற்றும் அமைதிவாத நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த அவர் வியட்நாம் போர், இரண்டாவது வளைகுடாப் போர் ஆகிய போர்களைக் கடுமையாக எதிர்த்தார். வானெகெட் அமெரிக்க அறிபுனை மற்றும் அங்கத இலக்கிய உலகின் பெரும்புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Douglas Adams Dark Matter Interview". Darkermatter.com. 2010-03-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்_வானெகெட்&oldid=2917219" இருந்து மீள்விக்கப்பட்டது